கம்பராமாயணம் 5075 · சுந்தர 3.193

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1புரியும் நல்நெறி முனிவரும், புலவரும், புகல்கிலர் பொறைகூர,
எரியும் வெம் சினத்து இகல் அடு கொடும் திறல் இராவணற்கு, எஞ்ஞான்றும்
பரியும் நெஞ்சினர் இவர் என வயிர்த்து ஒரு பகையொடும், பனித்திங்கள்
சொரியும் வெம் கதிர் துணைமுலைக் குவை சுடக் கொடிகளில் துடிக்கின்றார்.

பொருள் · Meaning in Tamil

புரியும் - யாவரையும் விரும்புகின்ற; நல்நெறி - நல்வழியில் செல்கின்ற; முனிவரும் - தவசிகளும்; புலவரும் - தேவர்களும்; புகல் இலா - பாதுகாப்பைப் பெறாமையாலே; பொறை கூர - பொறுமை அதிகரித்தும் (கருணையின்றி); எரியும் - எரிகின்ற; வெம்சினத்து - கொடிய கோபத்தால்; இகல் அடு - பகைமை அழிக்கின்ற; கொடுந்திறல் இராவணற்கு - மிக்க வலிமையுடைய இராவணனிடத்தில்; எஞ்ஞான்றும் - எந்தக் காலத்திலும்; பரியும் - அன்பு கொள்கின்ற; நெஞ்சினர் - உள்ளத்தை உடையவர்; இவர் - இந்த வித்தியாதர மகளிர்; என - என்று கருதி (அதனால்); வயிர்த்து - கோபம் கொண்டு; ஒரு பகை கொடு - ஒரு பகையை மனத்தில் வைத்து; பனித்திங்கள் - குளிர்ந்த சந்திரனானவன்; சொரியும் வெம் கதிர் - கொட்டுகின்ற கொடிய கிரணங்கள்; துணை - இரண்டு; குவை முலை சுட - குவிந்த தனங்களைச் சுட (அதனால்); கொடிகளின் - பூங்கொடிகளைப் போல; துடிக்கின்றார் - நடுங்குகின்றார்கள். புகல் - பற்றுக்கோடு, பாதுகாப்பு. (காப்பவர்) புகல் இலா - என்பதற்குக் கூறவியலாத என்றும் கூறலாம். ‘இந்தக் கவியில் எல்லார்க்கும் பகையான இராவணனிடத்திலே விருப்பமாயிருக்கலாமோ என்று சந்திரன் வாட்டுவதொத்தது’ என்பது பழையவுரை - (அடை - பதி) கோபம் “நெடும்பகையால் எரியும் வெம்சினம்” என்று கூறப்பெற்றது. “சேர்ந்தாரைக் கொல்லி” என்று தமிழ் வேதம் பேசும். துணை - இரண்டு. துணை முலை சாந்து கொண்டு அணியாள் (பெரியதிரு 2 - 7 - 2) இத்தொடரை, “பெரிய வாச்சான் பிள்ளை புறம்பு உவமானமின்றி தன்னில்தான் ஒப்பாகச் சொல்ல வேண்டும்படி இருக்கிற முலைகள்” என்று விளக்கினார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. While sages of the good path, who wish all well, and the gods, having no refuge, bore it in growing patience,
  2. these women, it said, have hearts that always melt for Irāvaṇaṉ of cruel might,
  3. who destroys his foes with burning fierce anger; so, bearing a grudge, the cool moon
  4. rained down scorching rays that burned their twin heaped breasts, and they quivered like creepers.

What the poem says

The cool moon, which normally soothes, burns these love-sick women instead. The poet gives an imagined reason. The sages and gods have no protection against Irāvaṇaṉ and must suffer him in silence, but the moon resents that these women love the enemy of the whole world.

So it takes its revenge by pouring scorching rays on their breasts, and they quiver like vines in the wind. Moonlight that burns separated lovers is a convention of Tamil poetry; here it is turned into a moral grudge.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1puriyum nalneṟi muṉivarum, pulavarum, pukal ilāp poṟaikūra,
eriyum vem ciṉattu ikal aṭu koṭun tiṟal irāvaṇaṟku, eññāṉṟum
pariyum neñciṉar ivar eṉa vayirttu oru pakaikoṭu, paṉittiṅkaḷ
coriyum veṅ katir tuṇaimulaik kuvai cuṭak koṭikaḷiṉ tuṭikkiṉṟār.