கம்பராமாயணம் 5074 · சுந்தர 3.192
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வளர்ந்த காதலர் - மேலும் மேலும் பெருகிய காதலுடைய வித்தியாதர மகளிர்; மகரிகை நெடுமுடி - மகரவடிவாக அமைந்த கிரீடத்தை அணிந்த; அரக்கனை - இராவணன்; வரக் காணார் - தம்பால் வருதலைப் பெறாதவராய்; தளர்ந்த சிந்தை - தளர்ச்சியடைந்த சிந்தையானது; தம் இடையினும் - தம்முடைய இடையை விட (அதிகமாக); நுடங்கிட - நடுக்கம் அடைய; உயிரொடு - உயிருடன்; தடுமாறி - கலக்கம் அடைந்து; செயிரியர் - பாணர்கள்; களந்தவா - கண்டத்தோடு மாறுபடாத; நெடுங்கருவியில் - நீண்ட இசைக்கருவிகளாலும்; கைகளில் - கைகளாலும்; கலைக்கண்ணால் - நூல்களாகிய கண்களைக் கொண்டு; அளந்த பாடல் - வரையறுக்கப் பெற்ற பாடல்களாகிய; வெவ் அரவு - கொடிய பாம்பு; தம் செவி புக - தம்முடைய செவியில் நுழைய; அலமரல் உறுகின்றார் - மனம் கலங்குகின்றனர்.
செயிரியர் - பாணர்கள். பிரிந்தார்க்கு இசை பாம்பு போல் வருத்தும். ‘வெதும்பும் மாதர்தம் இன் செவி பையரா நுழைகின்ற போன்றன பண்களின் நெடு பாடலே’, என்று கைகேசி சூழ்வினையில் பேசப்பட்டது (கைகேசி 58) அளந்த பாடல் - தாளத்தால் வரையறுக்கப்பெற்ற பாடல். கலைக்கண் உடையவரே வரையறுக்கவல்லார் - பஞ்ச மரபு, “தென்றல் வடிவும், சிவனார் திருவடிவும்..... வேத வடிவும் காணஇல்..... தாளம் காணலாம்”, என்று பேசிற்று (தாளவியல்) மகரிகை என்பது சுறா வடிவமாகக் கிரீடத்தில் அமையும் ஓருறுப்பு. இவ்விருத்தம் மா - விளம் - விளம் - விளம் - விளம் - காய் என்னும் சீர்களைப் பெற்றுவரும். இத்தகைய பாடல்களின் தொகை இந்நூலில் 48 (மணிமலர் 70).
ஆங்கிலம் · English translationAI
Translation
- Their love ever growing, not seeing the demon with the tall crown bearing the makara come to them,
- their failing minds wavering even more than their waists, faltering with their very lives,
- as songs that minstrels measured out, true to the throat, on long instruments and with their hands,
- with the eye of learning, entered their ears like cruel snakes, they were in torment.
What the poem says
The metre changes for the Vidyādhara women. Their love keeps growing, but Irāvaṇaṉ, with his tall crown bearing the makara, a sea-monster emblem, does not come to them. Their minds tremble more than their slender waists.
Minstrels play skilfully on long instruments and keep perfect time, but to these women the music is like a poisonous snake crawling into their ears. Music torments those apart from their lovers, as an earlier part of the epic also says.