கம்பராமாயணம் 5073 · சுந்தர 3.191
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(அனுமன்) இத்திறத்து - இப்படிப்பட்ட; ஈர் இரு கோடி ஈட்டம் - நான்கு கோடி என்னும் தொகையுள்ள; அரக்கிமார்கள் - அரக்க மகளிர்; பத்தியர் - (இராவணன்பால்) காதலுடையவராய்; உறையும் - தங்கியுள்ள; படர் - விரிந்த; பத்தி - வரிசையான; நெடும் தெருவும் - நீண்ட தெருக்களையும்; பார்த்தான் - (பிராட்டியைத் தேடிப்) பார்த்து விட்டு; சித்தியர் - சித்தர்குலப் பெண்கள்; உறையும் - தங்கியிருக்கும்; மாடம் - மாடங்களைப்பெற்ற; தெருவும் - தெருக்களும்; பின் ஆக - பிற்பட்டிருக்க; சென்றான் - தேடிச்சென்று (பிறகு); உத்திசை - இடைப்பட்ட திசையில்; விஞ்சை மாதர் - வித்தியாதர மகளிர்; உறையுளை - தங்கும் வீடுகளை; முறையின் உற்றான் - முறைப்படி அடைந்தான்.
பத்தியர் - காதலுடையவராய். “எரிசுடர்” என்னும் பாடல் முதல் “தயிர் நிறம்” என்னும் பாடல் ஈறாகப் பேசப்பட்டவர் அரக்கியர்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The long, wide streets in rows, where four crores of
- demon women of this kind lived in devotion, he looked through;
- he went on, leaving behind the mansioned streets where the Siddha women lived,
- and came in due order to the dwellings of the Vidyādhara women in the quarter between.
What the poem says
Aṉumaṉ has now searched the long streets where forty million demon women live, all devoted to Irāvaṇaṉ. The poet has described them in the verses just before this one.
He then passes through the streets of the Siddha women and comes in turn to the homes of the Vidyādhara women. These are captives taken from yet another race of heavenly beings.