கம்பராமாயணம் 5072 · சுந்தர 3.190

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தயிர் நிறக் கள் உண்டு, உள்ளம் தள்ளத் தம் அறிவு, தள்ளப்
பயிர் உறத் 'தெய்வம் என்மேல் படிந்தது, பார்மின்! 'என்னா,
உயிர் உயிர்த்து, இரண்டு கையும் உச்சிமேல் உயர நீட்டி,
மயிர் சிலிர்த்து, உடலம் கூசி, வாய் விரித்து, ஒடுங்கு வாரும்.

பொருள் · Meaning in Tamil

தயிர் நிறத்து உறு கள் - தயிரின் நிறத்தைப் பெற்ற மிக்க காழ்ப்புடைய கள்; உள்ளம் தள்ளுற - உள்ளத்தைத் தளரச்செய்ய; தம் - தம்முடைய; அறிவு தள்ளி - அறிவானது தடுமாற்றம் அடைந்து; பயிர் உற - தெய்வங்களை அழைத்தல் மிக (அதன்பின்); என்மேல் - என்னிடத்தில்; தெய்வம் படிந்தது - தெய்வம் சார்ந்துள்ளது; பார்மின் - காணுங்கள்; என்னா - என்று கூறி; உயிர் உயிர்த்து - பெருமூச்சுவிட்டு; உச்சிமேல் - தலையின்மேல்; இரண்டு கையும் - இரண்டு கைகளையும்; உயர நீட்டி - உயரும்படி நீட்டி; மயிர் சிலிர்த்து - மயிரானது சிலிர்க்கப் பெற்று; உடலம் கூசி - மேனி கூச்சம் அடைந்து; வாய் விரித்து - வாயைத் திறந்து; ஒடுங்குவாரும் - ஓய்ந்து போகின்றவர்களும். பிரிவாற்றாமையின் அதீதநிலை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As curd-white liquor overwhelmed their minds and drove out their wits,
  2. calling out to the gods, crying, 'A god has come down on me, look!',
  3. heaving great breaths, stretching both arms high above their heads,
  4. hair bristling, bodies shivering, mouths gaping, some sank down spent.

What the poem says

Other demon women, drunk on pale palm toddy the colour of curd, lose their senses entirely. They call on the gods and then cry out that a deity has possessed them.

They gasp, throw both arms up over their heads, their hair stands on end, their bodies shake, their mouths hang open, and finally they collapse. The commentary sees this as the last extreme of the pain of being apart from a lover.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tayir niṟattu uṟu kaḷ uḷḷam taḷḷuṟat, tam aṟivu taḷḷip
payir uṟat 'teyvam eṉmēl paṭintatu, pārmiṉ! 'eṉṉā,
uyir uyirttu, iraṇṭu kaiyum uccimēl uyara nīṭṭi,
mayir cilirttu, uṭalam kūci, vāy virittu, oṭuṅku vārum.