கம்பராமாயணம் 5071 · சுந்தர 3.189
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நாக நச்சு என - பாம்பின் விடமென்று கூறத் தக்க; கொடிய - கொடுமையான; கள்ளொடு குருதி நக்கி - கள்ளையும் குருதியையும் உண்டு; பிச்சரின் பிதற்றி - பித்தர்களைப் போலக் குழறிப் பேசி; அல்குல் பூந் துகில் - அரையிற் கட்டிய ஆடையையும்; கலாபம் - மேகலையையும்; பீறி - சிதைத்து; குச்சரி - குச்சரி என்று கூறப்பெறும்; திறத்தின் ஓசை - திறப்பண்ணின் ஓசையானது; களம் கொள - மிடற்றை இடமாகக் கொள்ள; குழூஉக் கொண்டு - கூட்டமாகச் சேர்ந்து; ஈண்டி - ஒன்றுபட்டு; சச்சரி - சச்சரி என்னும் வாத்தியத்தில்; பாணி கொட்டி - தாளத்தை வரையறுத்து; நிறை தடுமாறுவாரும் - மனத்தை நிறுத்த முடியாமல் குலைபவர்களும்.
கள்ளைப் பாம்பின் விடமென்றார் - பாம்பு வெகுண்டன்ன தேறல் என்றும் (சிறுபாண் - 237) பாம்புக் கடுப்பன்ன தோப்பி என்றும் (அகம் 348) சங்க இலக்கியம் பேசும். குச்சரி - கிளைப்பண். பெரும்பண்ணிற் கிளைப்பண் திறம் - குச்சரி ஐந்தாம் சாமத்தில் பாடப் பெறும். குச்சரி மல்லறி.... அஞ்சாம் சாமத்தில் பாட என்று பஞ்ச மரபு பேசும். சச்சரி - ஒரு வகை வாத்தியம். கொக்கரை சச்சரி வீணை (71) பாணியாணை (அப்பர் 288 - 7) பாணி கொட்டுதல், தாளத்தை வரையறுத்தல். மறக்க உண்ட மதுவும் பிறவும் பயன்படாமையால் காதல் நினைவால் தடுமாறினர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Lapping up liquor cruel as a snake's venom, along with blood,
- babbling like the mad, tearing the flowered cloth on their hips and their girdles,
- they gathered in throngs, the sound of the kuccari mode filling their throats,
- beat time on the caccari drum, and some lost all their self-command.
What the poem says
Some demon women have drunk liquor as strong as snake venom, and blood as well, as demons do. Now they babble like madwomen and tear at their clothes and girdles.
They crowd together singing in the kuccari mode, a musical mode sung in the fifth watch of the night, and beat time on a caccari drum. They drank to forget their longing, but it did not work, and they lose all control of themselves.