கம்பராமாயணம் 5070 · சுந்தர 3.188
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கூர்ங்கள் உண்டு - மயக்கம் மிக்க கள்ளை உண்டு; அலமந்த கண்ணார் - சுழலும் கண்களை யுடையவர்கள்; தண்டலை - தோட்டத்தில் உள்ள; வாழை அன்ன - வாழை போன்ற; குறங்கிடை - தொடைகளில்; அல்குல் தட்டில் - தேர்த்தட்டுப் போன்ற அல்குலில்; கொண்ட - உடுத்த; பூந்துகிலும் - பூத்தொழிலையுடைய சேலையும்; கோவைக் கலைகளும் - கோக்கப் பெற்ற இடையணிகளும்; சோர - சரிந்து நீங்கவும்; ஊசலிட்டு - ஊசலின் தன்மை பெற்று; உலாவுகின்ற - அசைகின்ற; குண்டலம் - குண்டலமானது; திருவில் வீச - வானவில்லின் ஒளியை வெளிப்படுத்த; குரவையில் - குரவைக் கூத்தாடுவதில் (இலயம்); குழறுவாரும் - தடுமாறுபவர்களும்.
மயக்கம் தரும் கள்ளையுண்டு, சேலையும், இடையணியும் சோர, குண்டலம் அசைய ஆடும் குரவையாட்டத்தில் இலயம் தடுமாறுபவர்களும். 186 ஆம் பாடல் காதலால் நிலைகுலைந்தும் முறை தவறாது பாடும் அரக்கியரைக் காட்டினார் கவிஞர். இங்கு கள்ளுண்டமையால் குரவையில் இலயம் தவறியவர்களை அறிமுகப் படுத்துகிறார். தண்டலை - தோட்டம். பூந்திரள் தண்டலை என்னும் மதுரைக்காஞ்சித் (47) தொடர்க்கு இனியர் ‘பூத்திரளையுடைய பூந்தோட்டங்கள்” என்று உரை வகுத்தார். பூந்துகில் - பூத்தொழிலை உடைய சேலை. பூந்துகில் மரீஇய ஏந்து கோட்டல்குல் (நெடுநல் 145) குரவை - குரவைக் கூத்து. திருவில் - வானவில். குண்டலம் திருவில் வீச (சிந்தா 677)
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the flowered cloth worn on the chariot-floor of their hips, between thighs like garden plantain trees,
- and their strung girdles slipped loose, with eyes rolling
- from drinking strong liquor, their swaying earrings
- swinging and flashing like rainbows, some stumbled in the kuravai dance.
What the poem says
Some demon women have drunk heavily and are dancing the kuravai, a round dance done with linked hands. Their eyes roll, their embroidered saris and jewelled girdles slip, and their swinging earrings flash like rainbows.
Being drunk, they keep missing the beat. The commentary contrasts them with the women of an earlier verse who sang in perfect time despite their love-sickness.