கம்பராமாயணம் 5082 · சுந்தர 3.200
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
எற்பு - எலும்புகளின்; தொடர் - கட்டினால் அமைந்த; வான் யாக்கையால் - சிறந்த உடம்பினால்; பெறும் - அடைய வேண்டிய; பயன் - பயனை; இழந்தனள் - இழந்துவிட்டாள்; இது நிற்க - இது கிடக்கட்டும்; இவள் - இங்கே துயிலும் இப்பெண்; வான் - சிறந்த; அற்புத் தளை - அன்பாகிய பிணிப்பை; இற்பிறப்பு அதனொடும் - குடிப் பிறப்போடு சேர்த்து; இகந்து - நீக்கி; தன் - தனக்கே உரிய; அரும் தெய்வக் கற்புநீங்கிய - அரிய தெய்வத்தன்மைவாய்ந்த கற்பை விட்டு விலகிய; கனங்குழை - பாரமான குழையணிந்தவள் (சீதை); எனின் - என்று உறுதிப் பட்டால்; காகுத்தன் புகழொடும் - இராமபிரானின் புகழும்; பொற்பும் - பொலிவும்; யானும் - நானும்; இவ் இலங்கையும் - இந்த இலங்கை மாநகரும்; அரக்கரும் - இராக்கதர்களும்; இன்று - இன்றைய தினத்தில்; பொன்றுதும் - அழிவோம்; என்றான் - என்று கருதினான்.
எற்பு - என்பு. நிற்க - கிடக்கட்டும். அலட்சியத்தைக் காட்டும் சொல். அது கிடக்கட்டும் என்றான் அனுமன். பொற்பு - பொலிவு. பொன்றுவது இன்று என்றான் - என்னும் பாடம் உள்ளது. பொன்றுவது - அழிதல். தொழிற்பெயர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'She has lost the fruit to be gained from a fine body strung together with bones! Let that be.
- If this lady with heavy earrings has cast off the noble bond of love, together with her birth in a good house,
- and left her own rare, divine chastity, then with Kākuttaṉ's fame,
- his splendour, I, this Ilaṅkai and the demons will all perish today!' he said.
What the poem says
In his anguish Aṉumaṉ imagines the worst. If this sleeping woman is Cītai and she has given up her love for Irāmaṉ, the honour of her family and her sacred chastity, then she has wasted the very purpose of having a human body.
He swears that in that case everything will be destroyed this very day: the fame of Irāmaṉ, here called Kākuttaṉ after his ancestor Kakutstha, Aṉumaṉ himself, Ilaṅkai and every demon in it. The verse shows how completely the whole mission rests on Cītai's faithfulness.