கம்பராமாயணம் 5083 · சுந்தர 3.201

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'மானுயர்த் திருவடிவினள் அவள் : இவள் மாறுகொண்டனள் : கூறில்,
தான் இயக்கியோ? தானவர் தையலோ? ஐயுறும் தகை ஆனாள்!
கான் உயர்த்த தார் இராமன்மேல் நோக்கிய காதல் காரிகையார்க்கு
மீன் உயர்த்தவன் மருங்குதான் மீளுமோ? நினைந்தது மிகை 'என்றான்.

பொருள் · Meaning in Tamil

அவள் - சீதாப்பிராட்டி; மானுயர் திருவடிவினள் - அழகிய மானிட மங்கையின் வடிவையுடையவள்; இவள் - இங்கே உறங்கும் இவளோ; மாறு கொண்டனள் - (மானிடரினும்) மாறுபட்ட வடிவத்தைப் பெற்றுள்ளாள்; கூறில் - (இவற்றை) கூறுபடுத்தி ஆராய்ந்தால்; தான் - இவள்; இயக்கியோ - யட்சப்பெண்ணோ?; தானவர் தையலோ - அசுரகுலப் பெண்ணோ?; ஐயுறும் - சந்தேகப்படுதற்கேற்ற; தகை ஆனாள் - தன்மையைப் பெற்றுள்ளாள்; காரிகையார்க்கு - மகளிர்க்கு; கான் உயர்த்த - மணத்துக்குச் சிறப்பைத்தந்த; தார் - மாலையணிந்த; இராமன் மேல் - இராமபிரான்பால்; நோக்கிய - சென்ற; காதல் - காதலானது; மீன் உயர்த்தவன் மருங்குதான் - மீன்கொடியை உயர்த்திய மன்மதன் பக்கலில்கூட; மீளுமோ - திரும்பிவருமோ?; நினைந்தது - (இவள் சீதை என்று) எண்ணியது; மிகை என்றான் - குற்றம் என்று கருதினான். மானுயர் - மனிதர் - (மானுஷர் - மானுடர் - மானுயர்) மானுயர் இவர் என மனக் கொண்டாய் எனின் (காட்சி 127) மீன் உயர்த்தவன் - மன்மதன். மீனேறுயர்த்த கொடிவேந்தன் (சிந்தாமணி 6) நோக்கிய - சென்ற - மந்தியும் கடுவனும் மரங்கள் நோக்க (சித்திரகூட 41). மிகை - குற்றம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'She has the beautiful form of a human woman; this one is different; if I weigh it,
  2. is she a Yakṣa woman? A woman of the Dānavas? She is such as to raise that doubt!
  3. For women whose love has turned to Irāmaṉ, whose garland makes fragrance itself finer,
  4. would that love come back even to the one with the fish banner? My thought was a fault,' he said.

What the poem says

Aṉumaṉ calms down and reasons it through. Cītai has a human body, but this woman's form is plainly not human. She must be a Yakṣa woman or one of the Dānavas, a race of demons.

Besides, a woman whose love has gone out to Irāmaṉ would never turn away from him, not even toward Maṉmataṉ, the love god whose banner carries a fish, let alone toward Irāvaṇaṉ. He decides that it was wrong even to think that this might be Cītai.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'māṉuyart tiruvaṭiviṉaḷ avaḷ: ivaḷ māṟukoṇṭaṉaḷ: kūṟiṉ,
tāṉ iyakkiyō? tāṉavar taiyalō? aiyuṟum takai āṉāḷ!
kāṉ uyartta tār irāmaṉmēl nōkkiya kātal kārikaiyārkku
mīṉ uyarttavaṉ maruṅkutāṉ mīḷumō? niṉaintatu mikai 'eṉṟāṉ.