கம்பராமாயணம் 5084 · சுந்தர 3.202

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'இலக்கணங்களும் சில உள! என்னினும், எல்லை சென்று உறுகில்லா
அலக்கண் எய்துவது அணியது உண்டு என்று, எடுத்து அறைகின்றது இவள் யாக்கை!
மலர்க் கருங் குழல் சோர்ந்து, வாய் வெரீஇச் சில மாற்றங்கள் பறைகின்றாள்!
உலக்கும் இங்கு இவள் கணவனும்! அழிவும் இவ் வியன் நகர்க்கு உளது! 'என்றான்.

பொருள் · Meaning in Tamil

சில இலக்கணங்களும் உள - (இவள்பால்) சில நல்லிலக்கணங்கள் உள்ளன; என்னினும் - என்றாலும்; இவள் யாக்கை - இவளுடைய உடலின் அடையாளம்; எல்லை சென்று உறுகில்லா - முடிவைச் சென்று சேராத; அலக்கண் - துன்பத்தை; எய்துவது - அடைவது; அணியது உண்டு - சமீபத்தில் இருக்கிறது; என்று எடுத்து அறைகுவது - என்று எடுத்துரைக்கின்றது (இவள்); மலர்க் கருங்குழல் - மலரணிந்த கரிய கூந்தலானது; சோர்ந்து - அவிழ்ந்து; வாய் வெரீஇ - வாய்குழறி; சில மாற்றங்கள் - சில சொற்களை; பறைகின்றாள் - கூறுகின்றாள்; இவள் கணவனும் - இவளுடைய கணவனும்; இங்கு உலக்கும் - இங்கே இறப்பான்; இ வியன் நகர்க்கு - இந்த பெரிய நகர்க்கு; அழிவும் - நாசமும்; உளது - இருக்கிறது. என்றான் - என்று கருதினான்.

பறைகின்றாள் - கூறுகின்றாள். ஏதம் பறைந்து அல்ல செய்து (திவ்ய திருவாய் 4-0-8) யாக்கை என்றது யாக்கையின் அடையாளங்களை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'There are some good marks on her, it is true; yet her body itself
  2. proclaims that a sorrow without end is near at hand for her!
  3. Her dark, flower-decked hair has come loose, and she murmurs words in fright in her sleep!
  4. Her husband too will die here, and ruin awaits this great city!' he said.

What the poem says

Looking closely at the sleeping queen, Aṉumaṉ reads the signs on her body. She has some auspicious marks, but others warn that endless grief is close at hand. Her hair has come loose and she mutters fearfully in her sleep, both bad omens.

He concludes that her husband will die here and the great city will be destroyed. Without yet knowing who she is, he foresees Maṇṭōtari's widowhood and the fall of Ilaṅkai.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ilakkaṇaṅkaḷum cila uḷa! eṉṉiṉum, ellai ceṉṟu uṟukillā
alakkaṇ eytuvatu aṇiyatu uṇṭu eṉṟu, eṭuttu aṟaikuvatu ivaḷ yākkai!
malark karuṅ kuḻal cōrntu, vāy verīic cila māṟṟaṅkaḷ paṟaikiṉṟāḷ!
ulakkum iṅku ivaḷ kaṇavaṉum! aḻivum iv viyaṉ nakarkku uḷatu! 'eṉṟāṉ.