கம்பராமாயணம் 509 · பால 9.43

Section பால காண்டம் / 9. அகலிகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சகரர் தொட்டலால், சாகரம் எனப் பெயர் தழைப்ப
மகர வாரிதி சிறந்தது; மகிதலம் முழுதும்
நிகரில் மைந்தனே புரந்தனன்; இவன் நெடு மரபில்
பகிரதன் எனும் பார்த்திவன் வந்து அவதரித்தான்.

பொருள் · Meaning in Tamil

அக்கடல் சகரர் தோண்டியதால் சாகரம் எனப்பட்டது; அம்சுமான் மரபிலே பகீரதன் என்பவன் தோன்றினான் என்பது.

அம்சுமான் மைந்தன் திலீபன்; திலீபன் மகன் பகீரதன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Because the sons of Cakaraṉ had dug it, the shark-filled sea grew famous,
  2. its name flourishing as Cākaram; and the whole earth
  3. that peerless boy ruled; and in his long line
  4. a king named Pakīrataṉ arose like the sun.

What the poem says

The great pit the princes dug filled with water and became the ocean, which is why the sea is called cākaram (sāgara), after the sons of Cakaraṉ. Añcumāṉ ruled the earth. His son was Tilīpaṉ, and Tilīpaṉ's son was Pakīrataṉ (Bhagīratha), who is the hero of the next part of the story.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cakarar toṭṭalāl, cākaram eṉap peyar taḻaippa
makara vāriti ciṟantatu; makitalam muḻutum
nikar il maintaṉē purantaṉaṉ; ivaṉ neṭu marapil
pakirataṉ eṉum pārttipaṉ paruti ottu utittāṉ.