கம்பராமாயணம் 5090 · சுந்தர 3.208
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஆய - அப்படிப்பட்ட; பொன் தலத்து - பொன்மயமான அரண்மனையில்; ஆய்வளை - சில வளையல்களை அணிந்த; ஆயிர அரம்பையர் - ஆயிரக்கணக்கான அரம்பையர்கள்; அணி நின்று - வரிசையாக இருந்து; தூயவெண் - தூய்மையும் வெண்மையும் பெற்ற; கவரித்திரள் - கவரிக் கூட்டங்களை; இயக்கிட - வீச (அதனாலெழுந்த); சுழிபடு - சுழித்தலைப் பெற்ற; பசுங்காற்றின் - இளங்காற்றால்; மீய - மேலேயுள்ள; கற்பகத் தேன்துளி - கற்பக மலரில் உள்ள தேன் துளிகள்; விராயன - மலருடன் கலந்தனவாய்; வீழ்தொறும் - படுந்தோறும்; நெடுமேனி தீய - பெரிய உடல் வெப்பமடையவும்; நல்தொடி - நல்ல வளையல் அணிந்த; சீதையை நினைதொறும் - சீதாபிராட்டியை எண்ணுந்தோறும்; உயிர்த்து - பெருமூச்சுவிட்டு; உயிர்தேய்வானை - உடல் தேய்கின்றவனை (இராவணனை).
பொன்தலத்து அரம்பையர் எனச் சேர்த்து விண்ணுலக மகளிர் என்றே அனைவரும் பொருள் கொண்டனர். திரிசிரபுரம் மகாவித்துவான் வி. கோவிந்தபிள்ளை அவர்கள், பொன்தலத்து என்பதற்கு பொன்மயமான இடம் என்று உரை வகுத்தார்.
வீயகற்பக - என்று பாடங்கொண்டு, கற்பகவீய எனக்கூட்டி கற்பகமலர் என்று பொருள் கொண்டவர் பலர். நன்று போலும்.
அணி நின்று - பக்கத்தில் இருந்து (பிறவுரை). உயிர் என்றது உடலை. தேய்வது அதுவாதலின். உயிர் முன்புடைப்ப (சிலம்பு - அடைக்கல - 86) என்னும் தொடரின்கீழே உயிர் என்றது ஆகுபெயரான் உடம்பை என்று வரைந்தார் அரும்பத உரையார்
ஆங்கிலம் · English translationAI
Translation
- In that golden place, as a thousand celestial maids with choice bangles stood in rows
- waving clusters of pure white fly-whisks, and the fresh breeze, whirling,
- made drops of honey from the wishing-tree flowers above fall mixed with blossoms, each time they fell
- his great body burned, and each time he thought of Cītai with her fine bangles he sighed and his life wasted away!
What the poem says
Even asleep, Irāvaṇaṉ is suffering. A thousand heavenly maidens wave white fly-whisks over him. Their breeze shakes drops of honey and petals down on him from the wishing-tree flowers above.
Yet every drop that should cool him only makes his huge body burn hotter. Every time Cītai comes into his mind he sighs, and his life seems to waste away. The mighty king is as sick with longing as the women of his own palace.