கம்பராமாயணம் 5092 · சுந்தர 3.210

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சாந்து அளாவிய கலவைமேல் தவழ்வுறு தண் தமிழ்ப் பசும் தென்றல்
ஏய்ந்த காமவெம் கனல் உயிர்த்து இருமடி துருத்தியின் உயிர்ப்பு ஏறக்
காந்தள் மெல் விரல் சனகிபால் மனம் முதல் கரணங்கள் கடிது ஓடப்
பாந்தள் நீங்கிய முழை எனக் குழைவு உறு நெஞ்சு பாழ்பட்டானை!

பொருள் · Meaning in Tamil

கலவை அளாவிய - கற்பூரம் முதலான கலவைகளைப் பெற்ற; சாந்துமேல் - சந்தனப் பூச்சின்மேல்; தவழ்வுறு - தவழ்கின்ற; தண்டமிழ் - குளிர்ந்த தமிழ் மொழியினுடன் பிறந்த; பசுந்தென்றல் - இளந்தென்றல் காற்றால்; காந்து - சுடுகின்ற; வெம் - கொடுமையான; காம கனல் - காமமாகிய நெருப்பு; உயிர்த்து - வெளிப்பட்டு (அதனால்); இருமடி - இரண்டு மடங்கு; துருத்தியின் - துருத்தியைப்போல; உயிர்ப்பு - பெருமூச்சு; ஏற - அதிகரிக்க; காந்தள் மெல்விரல் - காந்தள் மலரைப் போன்ற மெல்லிய விரலைப்பெற்ற; சனகிமேல் - சீதாப் பிராட்டியின்பால்; மனம் முதல் கரணங்கள் - மனம் முதலான கரணங்கள்; கடிது ஓட - வேகமாகச் சென்று சேர (அதனால்); பாந்தள் நீங்கிய - பாம்புகள் நீங்கப்பெற்ற; முழை என - புற்றைப்போல; குழைவுறு - நெகிழ்ந்த; நெஞ்சு - இதயம்; பாழ்பட்டானை - சூனியம்பட்டவனை (இராவணனை).

தென்றலுடன் தமிழ் பிறந்தது என்பது இலக்கிய வழக்கு. “மறம் பயின்றது எங்கோ தமிழ் மாருதம்” என்பர் தொண்டர் சீர் பரவுவார் (பெரிய தடுத்தாட் - 107). குமரகுருபரர், ‘தென்னந்தமிழினுடன் பிறந்த சிறுகால்’ என்பர் (மீனாட்சி - தால் - 1)

இராவணனின் அந்தக் கரணங்கள் பாம்பு போன்றவை. அவன் இதயம் புற்றையொப்பது. ஏந்துகாமவெங்கனலினுக்கு உமிழ் அதள் துருத்தியின் உயிர்ப்பேற - எனப்பாடங்கொண்டு, இராவணன் கொண்டுள்ள காமமாகிய கொடியநெருப்புக்கு புகுத்துகிற தோல்துருத்தியின் காற்றாக ஏற எனப்பொருள் உரைப்பர். அவர் துருத்தியின் காற்றாக ஏறுவது தென்றல் என்பர். தென்றல், துருத்தியின் உயிர்ப்பு ஏற, என முடிப்பர்.

அதள்துருத்தி - தோல்துருத்தி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the fresh south breeze, cool and born with Tamil, crept over the sandal paste mixed with fragrant blends,
  2. breathing out the fierce fire of love that he carried, his sighs rose twice as strong as a bellows' blast;
  3. as his mind and the other inner faculties raced swiftly to Caṉaki of the soft kāntaḷ-like fingers,
  4. his melting heart lay empty, like an anthill the snakes have left!

What the poem says

The gentle south breeze, which Tamil poets say was born together with the Tamil language in the southern hills, blows over Irāvaṇaṉ's sandal-smeared body. Instead of cooling him, it fans the fire of his desire like a bellows, and his sighs come twice as hard.

His mind and senses have all rushed off to Cītai, here called Caṉaki, daughter of Caṉakaṉ. His heart is left hollow and empty, like an anthill that the snakes living in it have abandoned.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cāntu aḷāviya kalavaimēl tavaḻvuṟu taṇ tamiḻp pacun teṉṟal
ēntu kāmaveṅ kaṉal uyirttu irumaṭi turuttiyiṉ uyirppu ēṟak
kāntaḷ mel viral caṉakimēl maṉam mutal karaṇaṅkaḷ kaṭitu ōṭap
pāntaḷ nīṅkiya muḻai eṉak kuḻaivuṟu neñcu pāḻpaṭṭāṉai!