கம்பராமாயணம் 5104 · சுந்தர 3.222

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆலம் பார்த்து உண்டவன்போல் ஆற்றல் அமைந்துளர் எனினும்,
சீலம் பார்க்குரியோர்கள் எண்ணாது செய்பவோ?
மூலம் பார்க்குறின் உலகை முடிவிக்கும் முறைத்து எனினும்,
காலம் பார்த்து இறை வேலை கடவாத கடல் ஒத்தான்.

பொருள் · Meaning in Tamil

(அனுமன்) உலகை - உலகங்களை; முற்றுவிக்கும் - அழிக்கின்ற; முறைதெரினும் - இயல்பை உடையது என்றாலும்; காலம் பார்த்து - காலத்தின் (ஆணையை) எதிர்பார்த்து; இறை - சிறிதுகூட; வேலை கடவாத - கரையை மீறிப்போகாத; கடல் ஒத்தான் - கடலைப்போல இருந்தான்; மூலம் - (அவ்வாறு அடங்கியதற்கு) காரணத்தை; பார்க்குறின் - ஆராய்ந்தால்; பார்த்து - தேவர்களின் துன்பத்தை நோக்கி; ஆலம் - விடத்தை; உண்டவன்போல் - உட்கொண்ட சிவபிரானைப்போல; ஆற்றல் - வலிமை; அமைந்துளர் எனினும் - அமையப் பெற்றவர் என்றாலும்; சீலம் - (தமக்குரிய) ஒழுக்கத்தை; பார்க்க உரியோர்கள் - பாதுகாக்கும் இயல்புடையவர்கள்; எண்ணாது - ஆராயாமல்; செய்பவோ - ஒரு செயலைச் செய்வார்களோ?

வேலை - கரை. “வேலை கடவாத பள்ளக்கடல்” (கம்ப - 1925) சீலம் பார்த்தல் - ஒழுக்கத்தைப் பாதுகாத்தல். காலம் கருதியிருப்பர்.. ஞாலம் கருதுபவர் என்று குறள் பேசும் (குறள் - 485).

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Even if they have strength like his who looked on the poison and swallowed it,
  2. will those whose part it is to guard right conduct act without thinking?
  3. If one looks to the root: though it knows how to bring the world to its end,
  4. he was like the sea that waits for its time and does not pass its shore by a hair.

What the poem says

Aṉumaṉ is compared to the ocean. The sea has the power to flood and destroy the whole world, yet it never crosses its shoreline until the appointed time at the end of an age.

The reason, the poet says, is that those who guard right conduct never act rashly, even if they are as mighty as Civaṉ, who swallowed the deadly poison that rose from the churned ocean to save the gods. This echoes the Tirukkuṟaḷ: those who aim to win the world wait for the right moment.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ālam pārttu uṇṭavaṉpōl āṟṟal amaintuḷar eṉiṉum,
cīlam pārkka uriyōrkaḷ eṇṇātu ceypavō?
mūlam pārkkuṟiṉ ulakai muṟṟuvikkum muṟaiteriṉum,
kālam pārttu iṟai vēlai kaṭavāta kaṭal ottāṉ.