கம்பராமாயணம் 5105 · சுந்தர 3.223

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இற்றைப் போர்ப் பெரும் சீற்றம் என்னோடு முடிந்திடுக!
கற்றைப் பூங் குழலாளைச் சிறைவைத்த கண்டகனை
முற்றப் போர் முடித்தது ஒரு குரங்கு, என்றால், முனை வீரன்
கொற்றப் போர்ச் சிலைத்தொழிற்குக் குறை உண்டாம் 'எனக் குறைந்தான்.

பொருள் · Meaning in Tamil

(அனுமன்) இற்றை - இன்றைய தினத்தில்; போர் - (இராவணனுடன் போர் செய்ய வேண்டும் என்னும்); பெருஞ்சீற்றம் - பெரியகோபம்; என்னோடு - எனக்குள்ளேயே; முடிந்திடுக - அடங்கிக் கிடக்கட்டும்; பூ - மலரணிந்த; கற்றைக்குழலாளை - அடர்ந்த கூந்தலையுடைய பிராட்டியை; சிறை வைத்த - சிறையிலே வைத்த; கண்டகனை - முள்போலும் இராவணனை; ஒரு குரங்கு - ஒரு குரங்கு; முற்ற - அழிய; போர் - போரிலே; முடித்தது - அழித்தது; என்றால் - என்று பேசப்பட்டால் (அது); முனைவீரன் - போரில் வல்ல இராமபிரானின்; கொற்றம் - வெற்றியைத் தருகின்ற; சிலை போர்த்தொழிற்கு - வில்லாற் செய்யப்படும் போர்ச் செயலுக்கு; குறை உண்டாம் - தாழ்ச்சி உண்டாகும்; என - என்று நினைந்து; குறைந்தான் - சீற்றம் தணிந்தான்.

பிராட்டி, ஐயன் வில்லின் ஆற்றலுக்கு மாசு உண்டாம் என்று கருதி, சொல்லினால் சுடாமல் அடங்கியிருந்தாள். அனுமனும் வீரன் சிலைக்குக் குறைவு உண்டாம் என்று கருதி இராவணனோடு போர் செய்தலைத் தவிர்த்தான். கண்டகன் - முள்போன்றவன். கண்டகம் - முள். இளம் கண்டகம் விட நாகத்தின் நாவொக்கும் ஈர்ம்புரவே (பாண்டிக்கோவை 283) முனை - போர். வேந்துடைத்தானை முனைகெட (புறம் 330).

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Let today's great rage for battle end within me!
  2. If it is said that a single monkey finished off in battle
  3. the thorn who imprisoned the lady with flowered tresses,
  4. it will diminish the victorious war-work of the hero's bow.' So his anger waned.

What the poem says

Aṉumaṉ gives one more reason for holding back. If people said that a mere monkey had killed Irāvaṇaṉ, the demon who is a thorn in the world's side, it would take away from the glory of Irāmaṉ's bow.

The honour of destroying Irāvaṇaṉ belongs to Irāmaṉ alone. The commentary notes that Cītai, too, refrains from burning Irāvaṇaṉ with the power of her chastity for the same reason: it would take the glory from her husband's bow.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṟṟaip pōrp peruñ cīṟṟam eṉṉōṭu muṭintiṭuka!
kaṟṟaip pūṅ kuḻalāḷaic ciṟaivaitta kaṇṭakaṉai
muṟṟap pōr muṭittatu oru kuraṅku, eṉṟāl, muṉai vīraṉ
koṟṟap pōrc cilaittoḻiṟkuk kuṟaivu uṇṭām 'eṉak kuṟaintāṉ.