கம்பராமாயணம் 5106 · சுந்தர 3.224

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

அந்நிலையான் - அவ்வாறு கோபம் அடங்கிய அனுமன்; பெயர்த்து - மறுபடியும்; உரைப்பான் - (தனக்குள்) கூறிக் கொண்டான்; இந்நிலையானுடன் - இந்த நிலையற்றவனுடன்; துயில்வார் - உறங்குகின்ற; ஆய்வளைக்கை - சிறந்த வளையலணிந்த கையையுடைய; அணியிழையார் - மகளிர்; உளரல்லர் - இல்லை; இவன் நிலையும் - இவனுடைய தன்மையும்; புல் நிலைய - புல் போன்ற தன்மையுடைய; காமத்தால் - காமத்தினாலே; புலர்கின்ற நிலை - வெப்பம் அடைகின்ற நிலைமையானது; எனக்கு - எனக்கு; பூவை - நாகணவாய்ப் பறவை போன்ற பிராட்டி; நல்நிலையில் - நல்ல கற்புடனே; உளள் என்னும் - இருக்கின்றாள் என்கின்ற; நலன் - நல்ல செய்தியை; நல்கும் - வழங்கும்.

இராவணனின் விரகதாபம் பிராட்டி கற்பினுடன் இருப்பதைத் தெரிவிக்கும் என்று அனுமன் யூகித்தான். அணியிழையாள் - என்பது மகளிர் என்னும் பொருள் தந்து நின்றது. இனியர் இதனைப் பெயராய் நின்றது என்பர். வளையலணிந்த கையை உடைய மகளிர் என்க. நிலையான் - உறுதியற்றவன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. In that state he spoke again: 'There are no bejewelled women with fine bangled hands
  2. sleeping beside this fickle one! And his state too,
  3. withering with a base love, is a state
  4. that gives me the good news that the mynah-like lady remains in her good state!'

What the poem says

With his anger under control, Aṉumaṉ reasons further. No woman is sleeping beside Irāvaṇaṉ, and the demon king lies burning with unsatisfied desire.

This is good news. If Irāvaṇaṉ is still suffering like this, it must mean that Cītai, sweet-voiced as a mynah, has not given in to him and is still faithful to Irāmaṉ. Aṉumaṉ reads her loyalty in her captor's torment.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1annilaiyāṉ, peyarttu uraippāṉ, 'āyvaḷaikkai aṇi iḻaiyār
innilaiyāṉuṭaṉ tuyilvār uḷarallar! ivaṉ nilaiyum
pul nilaiya kāmattāl pularkiṉṟa nilai! pūvai
nal nilaiyiṉ uḷaḷ eṉṉum nalaṉ eṉakku nalkumāl! '