கம்பராமாயணம் 5121 · சுந்தர 4.5
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(பிராட்டி) விழுதல் - பூமியில் விழுதல்; விம்முதல் - தேம்பி அழுதல்; மெய் உற வெதும்புதல் - அதிகமாக உடல் வெப்பம் அடைதல்; வெருவல் - அஞ்சுதல்; எழுதல் - எழுந்திருத்தல்; ஏங்குதல், இரங்குதல் - வருந்துதல், அழுதல்; இராமனை எண்ணித் தொழுதல் - இராமபிரானை நினைந்து வணங்குதல்; சோருதல் - தளர்ச்சியடைதல்; துளங்குதல் - உடல் நடுக்கம் அடைதல்; துயர் உழந்து உயிர்த்தல் - துன்பத்தால் சிதைந்து பெருமூச்சுவிடுதல்; அழுதல் - புலம்புதல்; அன்றி - ஆகிய இச்செயலைத் தவிர; அயல் ஒன்றும் - வேறு செயல்கள் எதுவும்; செய்குவது அறியாள் - செய்வது அறியாதவளாக இருந்தாள்.
பிராட்டி அழுதல் முதலான செயல்களைத் தவிர வேறு ஒன்றும் அறியாதவளாய் இருந்தாள். மற்று - அசை. செய்குவது - கு - சாரியை. ‘காய்குவள் அல்லளோ’ - கலித்தொகை 79.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Falling down, sobbing, burning through her whole body, taking fright,
- rising up, pining, grieving, thinking of Irāmaṉ and
- worshipping him, sinking, trembling, sighing as she suffered,
- and weeping: other than these she knew nothing else to do.
What the poem says
The verse lists everything Cītai does all day long. She falls to the ground, sobs, burns with fever, starts in fear, gets up again, pines and grieves. She thinks of Irāmaṉ and folds her hands to him in worship, then grows faint, trembles, sighs in anguish and weeps.
Apart from these she knows nothing else to do. The long, breathless list mirrors her restless, endless suffering.