கம்பராமாயணம் 5122 · சுந்தர 4.6

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தழைத்த பொன் முலைத் தடம் கடந்து அருவிபோல் தாழப்
புழைத்த போல நீர் நிரந்தரம் பொழிகின்ற பொலிவால்,
இழைக்கும் நுண்ணிய மருங்குலாள், இணை நெடும் கண்கள்
மழைக்கண் என்பது காரணக் குறி என வகுத்தாள்.

பொருள் · Meaning in Tamil

இழைக்கும் நுண்ணிய மருங்குலாள் - நூலின் இழையைவிட நுட்பமான இடையைப் பெற்ற பிராட்டி; நெடும் இணைகண்கள் - நீண்ட இரண்டு கண்கள்; புழைத்த போல - துளைபட்டுப் போனாற் போல; தழைத்த பொன்முலைத் தடம் கடந்து - சீரிய பொன்போன்ற பசலை படர்ந்த தனங்களைத் தாண்டி; அருவி போய்தாழ - அருவி சென்று கீழே இறங்க; நீர் - தண்ணீரை; நிரந்தரம் - எப்போதும்; பொழிகின்ற பொலிவால் - பொழியும் மிகுதியால்; மழைக்கண் என்பது - மழைக்கண் என்றுகூறப்படுவது; காரணக்குறி என வகுத்தாள் - காரணப் பெயர் என்று கூறும்படி நியமித்தாள்.

பிராட்டியின் கண்கள் இடையறாது அருவிபோல் கண்ணீர் பொழிவதால் “மழைக்கண்” என்றும் பெயர். மேகம் (மழை) போன்ற கண்கள் என்னும் பொருள் பெற்றுக் காரணப் பெயராயிற்று என்கிறான் கவிஞன். மழைக்கண் என்பதை இடுகுறிப் பெயர் என்று கூறியவரை மறுப்பதுபோல் உள்ளது. பொன் - பசலை. பொன் ஈன்ற நீலமாமணி முலையினாளே (சிந்தாமணி 6. 119) வகுத்தல் - நியமித்தல். “வகுத்தான் வகுத்தவகை” என்று தமிழ் மறை (குறள் 377.) பேசும். பொலிவு - மிகுதி. கழுநீர் பொலிந்த கண் அகன் பொய்கை (மதுரைக் - 171) மருங்குலாள் வகுத்தாள் என்க. அருவி “போல்” (அண், மல், கழு)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As if they had been pierced through, the streams passing over the broad slopes of her full, golden breasts and running down,
  2. by the sheer abundance with which they poured water without end,
  3. she whose waist is finer than a thread made her two long eyes
  4. prove that 'rain-cloud eyes' is a name given for a reason.

What the poem says

Tamil poets often call a woman's eyes 'rain-cloud eyes' (maḻaikkaṇ). Some grammarians treat this as an arbitrary stock name with no literal meaning.

Cītai's eyes pour tears so constantly, as if they had been pierced, that the streams run like waterfalls over her breasts, which have turned pale gold with the pallor of love-sickness. She proves that the phrase is literally true: her eyes really are rain clouds.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1taḻaitta poṉ mulait taṭam kaṭantu aruvi pōyt tāḻap
puḻaitta pōla nīr nirantaram poḻikiṉṟa polivāl,
iḻaikkum nuṇṇiya maruṅkulāḷ, iṇai neṭuṅ kaṇkaḷ
maḻaikkaṇ eṉpatu kāraṇak kuṟi eṉa vakuttāḷ.