கம்பராமாயணம் 5123 · சுந்தர 4.7

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அரிய மஞ்சினோடு அஞ்சனம் முதலிய அதிகம்
கரிய காண்டலும், கண்ணின்நீர் கடல்புகக் கலுழ்வாள்;
உரிய காதலர் ஒருவரோடு ஒருவரை உலகில்
பிரிவு எனும் துயர் உருவுகொண்டால் அன்ன பிணியாள்.

பொருள் · Meaning in Tamil

உலகில் - இந்த உலகத்தில்; உரிய காதலின் ஒருவரோடு - உரிமையாகக் கொண்ட காதலுடைய ஒருவரோடு; ஒருவரை - ஒப்பற்ற அன்புடையவர்களை; பிரிவு எனும் துயர் - பிரிதல் என்னும் துன்பமானது; உருவு கொண்டால் அன்ன - வடிவம் பெற்றாற் போன்ற; பிணியாள் - நோயை உடைய பிராட்டி; அரிய மஞ்சினோடு - அழகிய மேகத்துடன்; அஞ்சனம் முதல் - மை முதலான; அதிகம் கரிய இவை - சிறப்புற்ற கரிய நிறம் உடைய இப் பொருள்களை; காண்டலும் - பார்த்தவுடன் (இராமன் மேனியின் நிறம் மனத்தில் தோன்றுதலால்); கண்ணின்நீர் - கண்ணிலிருந்து வரும் நீர்ப் பெருக்கு; கடல் புகக் கலுழ்வாள் - கடலில் பாயும்படி மனம் உருகுவாள்.

மேகம், மை, முதலான பொருள்கள் இராமபிரானை நினைப்பூட்டுதலால் பிராட்டி துன்புற்றாள். “இப்பொருள்” என்றது நீலக்கடல், காயாம்பூ முதலானவற்றை. கலுழ்தல் - உருகுதல். கலுழத் தன் கையால் தீண்டி (சிந்தா. 8.38) “ஒருவரொடு” என்பதில் உள்ள ‘ஒடு’ உருபை ஐயுருபாக்கக் கொள்க. உருபு மயக்கம். ‘நாகு வேயொடு நக்கு வீங்கு தோள்” என்னும் தொடரை உள்ளுக. “ஒருவரை” என்பதில் உள்ள ‘ஐ’ சாரியை. இரண்டன் உருபன்று. ‘யாவையும் சூனியம் சத்து எதிர்’ - சிவஞான போதம் - 7. யாவும் என்பது யாவையும் என வந்துள்ளது - ஐ - சாரியை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Whenever she saw a lovely cloud, collyrium, or any of these deeply
  2. dark things, she wept until the water of her eyes flowed into the sea;
  3. she bore an affliction like the sorrow of separation itself, which parts in this world
  4. one from the other who belong to each other in love, taking on a body.

What the poem says

Irāmaṉ is dark-skinned, the colour of a rain cloud. So whenever Cītai sees anything dark, a cloud, kohl or the blue sea, it reminds her of him, and she cries so much that her tears seem to run down into the ocean.

The poet says she is the pain of separation itself, the grief that tears lovers apart in this world, taking on a human form.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ariya mañciṉōṭu añcaṉam mutal ivai atikam
kariya kāṇṭalum, kaṇṇiṉnīr kaṭalpukak kaluḻvāḷ;
uriya kātaliṉ oruvarōṭu oruvarai ulakil
pirivu eṉum tuyar uruvukoṇṭālaṉṉa piṇiyāḷ.