கம்பராமாயணம் 5126 · சுந்தர 4.10
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கமையினாள் - பொறுமை உடைய பிராட்டியின்; திருமுகத்து அயல் - அழகிய முகத்தின் இரு பக்கங்களிலும்; கதுப்பு உறக் கவ்வி - கன்னங்களில் நன்றாகப் பற்றி; நிலத்திடைக் கிடந்த - பூமியிலே படிந்துள்ள; சுமை உடை கற்றை - பாரம் உடைய கூந்தலின் தொகுதியானது; தூமதியை அமையவாயில் பெய்து - தூய்மையான சந்திரனை வாயில் இட்டு; உமிழ்கின்ற அயில் எயிற்று அரவின் - வெளியிலே உமிழ்கின்ற கூரிய பற்களையுடைய இராகுவைப் போல; குமை உறத்திரண்டு - நெருக்கம் மிகுந்து திரட்சியாகி; ஒரு சடை ஆகிய குழலாள் - ஒரு சடையாகிய கூந்தலையுடையாள்.
கமை - பொறுமை. கதுப்பு - கன்னம். நிலத்திடைக் கிடந்த கற்றை என மாற்றுக. இது “தோல் போர்த்த என்பு உடம்பு” என்பதனை, “என்பு தோல் போர்த்த உடம்பு” (குறள். 80) என்று கூறியதை ஒக்கும். நிலத்திடைக் கிடந்த என்னும் அடைமொழியை மதிக்குச் சேர்ப்பாரும் உளர். குழல் சடையாயிற்று என்பதைப் போலவே ‘நறுங்குஞ்சி ஈண்டு சடையாயினது’ என்று பேசுவார் (கம்ப. 5264)
ஆங்கிலம் · English translationAI
Translation
- The heavy mass of hair of the patient lady, clinging close to her cheeks
- on both sides of her lovely face and lying on the ground,
- like the sharp-toothed serpent that takes the pure moon fully into its mouth and spits it out,
- had matted thick together into a single braid.
What the poem says
Cītai has not combed or dressed her hair since she was taken, as a woman parted from her husband should not. It has matted into one heavy braid that clings to her cheeks and trails on the ground.
Her pale face framed by this dark mass looks like the moon being swallowed and spat out again by Rāhu, the serpent-demon that causes eclipses. She is called the patient one, which stresses her endurance.