கம்பராமாயணம் 5125 · சுந்தர 4.9

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அரிது போகவோ விதிவலி கடக்க என்று அஞ்சிப்
பரிதி வானவன் குலத்தையும் பழியையும் பாராச்
சுருதி நாயகன் வரும் வரும் என்பது ஓர் துணிவால்
கருதி, மாதிரம் அனைத்தையும் அளக்கின்ற கண்ணாள்.

பொருள் · Meaning in Tamil

போகவோ - சிறையிலிருந்து தப்பிச் செல்லுதலோ; விதிவலி கடத்தல் ஓ - விதியின் வலிமையைக் கடந்து போதலோ; அரிது - முடியாததாகும்; என்று அஞ்சி - என்று கருதி அச்சமுற்று; சுருதி நாயகன் - வேதத்தின் தலைவனான இராமபிரான்; பரிதி வானவன் குலத்தையும் - தன்னுடைய சூரிய வம்சத்தையும்; பழியையும் - தனக்கு நேர்ந்த அவமானத்தையும்; பாரா - பார்த்து; வரும் வரும் - (உறுதியாக) வருவான் வருவான்; என்பது ஓர் துணிவால் - என்று (அடிமனம் கூறும்) உறுதிப்பாட்டால்; கருதி - இராமபிரானது வருகையை எதிர்பார்த்து; மாதிரம் அனைத்தையும் - எல்லாத் திசைகளையும்; அளக்கின்ற கண்ணாள் - துழாவிப் பார்க்கும் கண்களையுடையாள்.

போதல் என்னும் தொழிற் பெயர் போக என்னும் வடிவம் பெற்றது. வரல் இயலாது - வர இயலாது என வந்தாற்போல, போகவோ என்பதில் உள்ள ஓகாரத்தைக் கடத்தல் என்பதுடன் கூட்டவேண்டும். “அரிது போகவோ” என்னும் பாடம் சிறப்புடைத்து. போகவோ, கடத்தலோ அரிது - என முடிக்க. விதி வலி கடத்தல் போகவோ - அரிது என்று கூட்டி, விதி வலி கடந்து செல்லுதல் என்பது போக முடியாத அரிய காரியம் என்றும் கூறுவர் (அடை - பதி) போகவே, விதி வலி கடத்தல் அரிது என்று கூட்டி (யான் உயிர் நீங்குவேன் ஆகவோ என்றால்) ஊழ்வினையின் வலிமையை மீளுதல் அரிது என்றும் கூறுவர் (வை. மு. கோ.) விதி வலி கடக்கப் போவது அரிது என்று கூட்டி - ஊழ்வலியைக் கடக்கச் செல்லவே இயலாது - என்று கூறும் (அண்மல். கழு) கடக்க என்றும் பாடம் கொள்ளப்பெற்றது. அரிது போகவோ - இவ்வூரை விட்டுப் போகலாம் என்றாலோ மிகவும் அரிதாயிருக்கிறது. விதி - தெய்வசங்கற்பமோ வலி கடத்தல் - நமது செய்கையை விஞ்சியதாக இருக்கிறது என்று உரை வகுத்தவர் வி. கோவிந்தப்பிள்ளை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Afraid, thinking, 'To escape is hard, and hard to overcome the power of fate',
  2. yet with a firm conviction that the Lord of the Vedas, mindful of the race of the sun god
  3. and of the disgrace done to him, will come, will surely come,
  4. she kept him in mind, her eyes measuring every quarter of the sky.

What the poem says

Cītai is afraid. She cannot escape on her own, and no one can overcome fate. Yet deep down she is certain that Irāmaṉ, Lord of the Vedas, will come. He will think of the honour of his solar dynasty and of the insult done to him.

So she keeps watching all around the horizon, searching every direction for a sign of his coming. The commentary sets out several ways scholars have read the difficult opening words.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aritu pōkavō vitivali kaṭattal eṉṟu añcip
pariti vāṉavaṉ kulattaiyum paḻiyaiyum pārāc
curuti nāyakaṉ varum varum eṉpatu ōr tuṇivāl
karuti, mātiram aṉaittaiyum aḷakkiṉṟa kaṇṇāḷ.