கம்பராமாயணம் 5128 · சுந்தர 4.12
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இளவலும் - இளையபெருமாளும்; கண்டிலன் கொல் ஆம் - (மான் பின் போன இராமபிரானை) காணவில்லை போலும்; உலகு எலாம் ஒறுப்பான் - எல்லா உலகங்களையும் வருத்தும் இராவணன்; கொண்டு இறந்தமை - அபகரித்துக் கொண்டு கடல் கடந்து வந்ததை; அறிந்திலர் ஆம் - அறியவில்லை போலும்; (அறிந்தாலும்) இலங்கை - இலங்கை மாநகர்; கனைகடல் நடுவண் உண்டு - ஆரவாரிக்கும் கடலின் நடுவில் உள்ளது; என்று உணர்ந்திலர்? - என்று அறியவில்லையோ; என - என்று நினைத்து; குழையா - மனம் வருந்தி; எரி - நெருப்பானது; புண் திறந்து - புண்ணைத் திறந்து; அதில் நுழைந்தால் என - அதற்குள் புகுந்தாற் போல; புகைவாள் - மனம் வருத்தம் அடைவாள்.
கண்டிலன் கொல்ஆம் என்பதில் உள்ள “கொல் ஆம்” என்னும் ஐய உணர்வுச் சொற்களை உணர்ந்திலர் என்பதனுடன் சேர்க்க. ‘கொல்’ ஐயப் பொருளையும் ‘ஆம்’ போலும் என்னும் பொருளையும் தரும். ‘காணலனே கொலாம்” (கம்ப. 2751) ஆம் என்பதை அசையாக்குவாரும் உண்டு (அண் - பல் - கலை - பதி)
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Did the younger brother too fail to find him? Do they not know
- that Ilaṅkai lies in the middle of the roaring sea? Do they not know that he who torments all the worlds
- carried me off and went away?' So thinking, melting,
- she smouldered as if fire had entered a wound torn open.
What the poem says
Cītai tries to explain why no one has come. Perhaps Ilakkuvaṉ never found Irāmaṉ after he went chasing the golden deer. Perhaps they do not know that Irāvaṇaṉ, tormentor of the worlds, carried her off across the sea. Or they do not know that Ilaṅkai lies in the middle of the ocean.
Each thought hurts her like fire pushed into an open wound.