கம்பராமாயணம் 5129 · சுந்தர 4.13

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'மாண்டுபோயினன் எருவைகட்கு அரசன், மற்று அவரோடு
ஆண்டை என் நிலை உரைப்பவர் இல்லை : இப் பிறப்பில்
காண்டலோ அரிது! 'என்று என்று விம்முறும், கலங்கும்;
மீண்டும் மீண்டும் புக்கு எரி நுழைந்தால் என மெலிவாள்.

பொருள் · Meaning in Tamil

எருவைகட்கு அரசன் - கழுகுகளின் தலைவனான சடாயு; மாண்டு போயினன் - இறந்து விண்ணுலகை அடைந்தான்; மற்றோர் - வேறுபிறர்; யாண்டை - எங்கே; என் நிலை அறிவுறுப்பார்கள் - என்னுடைய தற்போதைய நிலையைச் (இராமலக்குவர்க்குச்) சொல்வார்கள்; இப்பிறப்பில் - (ஆதலால்) இந்தப் பிறப்பிலே (இராமலக்குவர்களை); காண்டலோ அரிது - காண்பது அருமையானதாகும்; என்று என்று - என்று பலபடியாக எண்ணி; விம்முறும் - துன்புறுவாள்; கலங்கும் - சஞ்சலம் அடைவாள்; மீண்டு மீண்டு - திரும்பத் திரும்ப; எரி புக்கு - நெருப்பு புகுந்து; நுழைந்தால் என - நுழைந்தாற் போல; மெலிவாள் - தளர்ச்சியடைவாள்.

கழுகுகட்கு அரசன் இறந்து போயினனோ என்று பிராட்டி ஐயுறுவதாக உரை கூறுவாரும் உளர். சடாயு இறந்து விட்டான் என்று கருதிப் பிராட்டி “வன்துணை உளன் என வந்த மன்னனும் பொன்றினன்” என்று கூறிப் புலம்புகிறாள் (கம்ப. 3447) ஆதலின் அவ்வுரை பொருந்தாது. எருவைகள் - கழுகுகள். நெருப்புச் சுட்ட இடத்திலேயே மீண்டும் நெருப்புப் புகுந்து சுட்டாற் போலப் பிராட்டி வருந்தினாள் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The king of the vultures is dead and gone; where are others
  2. who could make my state known? In this life
  3. to see them again is hard!' Saying this again and again she sobs and is troubled,
  4. and wastes away as if fire had entered her and burned her again and again.

What the poem says

Cītai remembers Caṭāyu, king of the vultures, who fought Irāvaṇaṉ to rescue her and fell. He is dead, so who else could tell Irāmaṉ and Ilakkuvaṉ where she is?

She fears she will never see them again in this life. The thought burns her over and over, like fire returning to scorch the same place again.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'māṇṭupōyiṉaṉ eruvaikaṭku aracaṉ maṉ; maṟṟōr,
yāṇṭai eṉ nilai aṟivuṟuppārkaḷ? ip piṟappil
kāṇṭalō aritu! 'eṉṟu eṉṟu vimmuṟum, kalaṅkum;
mīṇṭu mīṇṭu pukku eri nuḻaintāleṉa melivāḷ.