கம்பராமாயணம் 5130 · சுந்தர 4.14

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1'என்னை நாயகன் இளவலை எண்ணிலா வினையேன்
சொன்ன வார்த்தை கேட்டு அறிவிலள், எனத் துறந்தானோ?
முன்னை ஊழ்வினை முடிந்ததோ? ' என்று என்று முறையால்
பன்னி, வாய் புலர்ந்து, உணர்வு தேய்ந்து, ஆருயிர் பதைப்பாள்.

பொருள் · Meaning in Tamil

இளவலை - இளைய பெருமாளை; எண்ணலா வினையேன் - மதியாத தீவினையைச் செய்த யான்; சொன்ன வார்த்தை - கூறிய கொடுஞ்சொற்களை; கேட்டு - கேள்விப்பட்டு; நாயகன் - இராமபிரான்; என்னை அறிவு இலள் எனத் துறந்தானோ? - (அன்புக்குரிய) என்னை அறிவற்றவள் என்று கருதி ஒதுக்கித் தள்ளி விட்டானோ; (அல்லது) முன்னை ஊழ்வினை - பழைய தீவினையானது; (என்னைத் துன்புறுத்துவதென்று) முடிந்ததோ - தீர்மானித்துவிட்டதோ; என்று என்று - என்று என்று (பலபடியாக); முறையால் - வரிசைப்படி; பன்னி - சொல்லிச் சொல்லி; வாய் புலர்ந்து - நா வறண்டு; உணர்வு தேய்ந்து - உணர்ச்சி தளர்ந்து; ஆர் உயிர் பதைப்பாள் - அரிய உயிர் துடித்து வருந்துவாள். முடிதல் - தீர்மானித்தல். பன்னி - திரும்பத் திரும்பச் சொல்லி. ஊழ்வினை முடிந்ததோ என்பதற்கு - முற்பிறப்பில் செய்த கரும வசத்தினால் நேர்ந்ததோ என்றும் (வை. மு. கோ.) பூர்வகர்ம பலன் அவர் வேண்டா என்று சொல்லும்படி முடிதல் ஆயிற்றோ என்றும் (வி. கோ.) கூறப்படுகிறது. ஊழ்வினை முடிந்ததோ என்பதற்கு எழுமையும் தொடர்ந்த அன்பு முடிந்ததோ என்றும் கூறலாம். ஊழ்வினையால் உள்ளம் சுடுமால் என்னும் தொடருக்கு (வக குணமாலை 114) நச்சர் உழுவல் அன்பாலே என் உள்ளத்தைச் சுடாநின்றது என்று உரை வகுத்தார். இப் பாடலில் உள்ள நாயகன் என்னும் எழுவாயை 15, 16, 17 ஆம் பாடல்களில் சேர்க்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Hearing the words I spoke, I, the sinner who did not respect the younger brother,
  2. has my Lord cast me off, thinking, "She has no sense"?
  3. Or has the fate of my former deeds been fulfilled?' Again and again, in turn,
  4. she repeats it, her mouth gone dry, her senses fading, her precious life throbbing in anguish.

What the poem says

Cītai blames herself. When Irāmaṉ went after the golden deer, she spoke harsh, unjust words to Ilakkuvaṉ to force him to leave her and go to his brother's help.

Now she wonders whether Irāmaṉ heard of those words and abandoned her as a foolish woman. Or perhaps the karma of her past lives has simply run its course. She says these things over and over until her mouth is dry and she nearly faints.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'eṉṉai nāyakaṉ iḷavalai eṇṇalā viṉaiyēṉ
coṉṉa vārttai kēṭṭu aṟivu ilaḷ, eṉat tuṟantāṉō?
muṉṉai ūḻviṉai muṭintatō? ' eṉṟu eṉṟu muṟaiyāl
paṉṉi, vāy pularntu, uṇarvu tēyntu, ār uyir pataippāḷ.