கம்பராமாயணம் 5193 · சுந்தர 4.77
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(அனுமன்)
என்று - என; இவை - இவற்றையும்; இனையன - இவை போன்றவற்றையும்; எண்ணி - நினைத்து; வண்ணம் - அழகியதும்; வான் - உயர்ந்ததும் (ஆகிய); பொன் - பொன்னால் அமையப் பெற்றதும்; திணி - செறிவுடையதும் (ஆகிய); நெடுமரப் பொதும்பர் - பெரிய மரச் செறிவில்; புக்கு - புகுந்து; அவண் - அவ்விடத்தில் (மறைந்து); நின்றனன் - நின்றான்; அவ்வழி - அவ்விடத்தில்; நிகழ்ந்தது - நடந்தது; என் எனின் - என்ன வென்றால்; பூ துன்று - மலர்கள் நெருங்கிய; சோலைவாய் - சோலையின்கண் (அனுமனுக்கு); அரக்கன் தோன்றினான் - இராவணன் தோன்றினான்.
பொதும்பர் - சிலேடைச் சொல். மரச் செறிவு, மரப் பொந்து என்னும் பொருள்களைத் தரும். 'வெயில்கண் போழாப் பயில் பூம் பொதும்பில்' என்னும் பெருங்கதையும் (! - 28 -27) 'பொதும்பு பொள்ளல் பொந்தாம்' எனும் பிங்கல நிகண்டும் (2853) நோக்குக. அனுமன் மரச் செறிவிலிருந்து நோக்கினான், என்று வான்மீகமும், மரப் பொந்திலிருந்து நோக்கியதாக அபிஷேக நாடகமும் பேசும். கவிச்சக்கரவர்த்தி, இருவர் கருத்தும் பகையாதபடி பொதும்பர் என்னும் பொதுச் சொல்லாற் பேசினார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Thinking these thoughts and others like them, the hero
- entered a thicket of tall, beautiful, dense golden trees, and there
- he stood hidden. What happened then?
- Into the flower-crowded grove the demon king appeared.
What the poem says
Still lost in such thoughts, Aṉumaṉ slips into a dense cluster of tall golden trees and hides there. Then, in the flower-filled grove, Irāvaṇaṉ himself appears.
The word Kampaṉ uses for Aṉumaṉ's hiding place can mean either a thicket or a hollow in a tree. Vālmīki has him watch from thick foliage and a Sanskrit play from a tree-hollow; Kampaṉ's choice of word quietly allows both.