கம்பராமாயணம் 5192 · சுந்தர 4.76

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1செல்வமோ அது! அவர் தீமையோ இது!
அல்லும் நன்பகலும் நின்று அமரர் ஆட்செய்வார்!
ஒல்லுமோ ஒருவர்க்கு ஈது? உறுகண் யாது இனி?
வெல்லுமோ தீவினை அறத்தை மெய்ம்மையால்?

பொருள் · Meaning in Tamil

(அரக்கர்களுக்கு)

அல்லினும் பகலினும் - இரவுப் போதிலும் பகற்போதிலும்; அமரர் ஆட் செய்வார் - தேவர்கள் அடிமைத் தொழில் புரிவார்கள்; அவர் செல்வமோ அது - அவர்களுடைய செல்வமோ அப்படி உள்ளது; அவர் தீமையோ இது - அவர் செய்கின்ற கொடுமையோ இப்படியுள்ளது; ஈது ஒருவர்க்கு ஒல்லுமோ - இந்த நிலைமையானது ஒருவருக்கு அடுக்குமா; தீவினை - தீவினையானது; அறத்தை - தருமத்தை; வெல்லுமோ - வென்றுவிடுமோ (வெல்லாது ஆதலால்); இனி உறுகண் யாது - இனிமேல் உலகத்திற்குத் துன்பம் ஏது?

'அறம் வெல்லும் பாவம் தோற்கும்' என்ற உண்மை காவியத்தில் அங்கங்கே கலியால் சுட்டிச் செல்லப் படுகிறது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Such is their wealth, and such is their wickedness!
  2. Night and day the immortals serve them as slaves!
  3. Is this fit for anyone? What harm can come now?
  4. Can evil truly conquer dharma?'

What the poem says

Aṉumaṉ contrasts the demons' splendour, with the gods themselves serving them day and night, against the cruelty they have shown in holding Cītai captive.

Such fortune cannot belong rightly to such wrongdoers. Evil cannot defeat righteousness, so the world has nothing more to fear. The epic repeatedly returns to this conviction that dharma wins and sin loses.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1celvamō atu! avar tīmaiyō itu!
alliṉum pakaliṉum amarar āṭceyvār!
ollumō oruvarkku ītu? uṟukaṇ yātu iṉi?
vellumō tīviṉai aṟattai meymmaiyāl?