கம்பராமாயணம் 5195 · சுந்தர 4.79
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
உருப்பசி - ஊர்வசியானவள்; உடைவாள் எடுத்தனள் - உடைவாளை எடுத்துக் கொண்டு; தொடர - பின்னே வரவும்; மேனகை - மேனகையானவள்; வெள்ளடை - வெற்றிலையை, உதவ - (பக்கத்திலிருந்து) வழங்கவும்; திலோத்தமை - திலோத்தமையானவள்; செருப்பினைத் தாங்கி - செருப்பைச் சுமந்தபடி; செல்ல - (ஒருபக்கம்) போகவும்; அரம்பையர் குழாம் - (பிற) தேவ மகளிரின் கூட்டம்; புடை சுற்ற - பக்கங்களில் சூழ்ந்து வரவும்; (மேனியைச் சார்ந்த) கருப்புரச் சாந்தும் - கர்ப்பூரம் கலந்த சந்தனமும்; கலவையும் - குங்குமம் முதலியவற்றின் சாந்தும்; மலரும் - பலவகைப்பூக்களும், கலந்து - ஒன்று சேர்ந்து; உமிழ் பரிமள கந்தம் - வெளிப்படுத்தும் நறுமணமானது; மருப்புடை - கொம்பைப் பெற்ற; பொருப்புஏர் - மலைகளை ஒத்த; மாதிரக்களிற்றின் - திக்குயானைகளின்; வரி கை வாய் மூக்கிடை - கோடுகளைப் பெற்ற கையிலே வாய்க்கப் பெற்ற மூக்கின் கண்ணே; மடுப்ப - கலக்கவும்.
79 பாடல் முதல் 96 பாடல்கள் வரை உள்ள மடுப்ப, அவிந்திருப்ப முதலான செய என் எச்சங்கள் 96-பாடலில் உள்ள உலாவி என்னும் செய்து என்னும் வாய்பாட்டை அவாவ, அஃது எய்துகின்றானை என்னும் வினையாலணையும் பெயரின் பகுதியுடன் நிறைவு பெறுகிறது. உலாவி என்பது வினை எச்சமாதலின் பெயர் கொண்டு முடியா, ஆதலின் எய்துகின்ற என்னும் பகுதியுடன் முடிந்தது என்க. இராவணன் மேனியின்கண் மணப்பொருளின் வாசனை பேசப்பெற்றது. கைவாய் மூக்கு - கையிலே அமைந்த மூக்கு. அப்பர் யானையின் கையே மூக்காக அமைந்ததை நோக்கி நெடுமூக்கிற் கரியினுரி (தேவாரம் 310 -8) குமரகுருபரர் தடக்கை நாசி என்பார் (மீனாட்சி பிள்ளைத் தமிழ் 8) வெள்ளடை - வெற்றிலை - வெள்ளடைத் தம்பல் (கம்ப. 4176) உலகில் உள்ள மணங்களைத் திக்குயானைகள் அனுபவித்தன. தகரக் குழலின் நறையும், நறைதரு தீம்புகையும் திசைக்களிற்றின் தடக்கை நாசிப் புழை மடுப்ப என்பது குமரகுருபரர் அமுதத்தமிழ் (மீனாட்சி - தமிழ் 61) கலவை - குங்குமம் முதலியவற்றின் கலவை. குங்குமக் கலவையை 'மனாலக் கலவை' என்று பதிற்றுப் பத்து பேசும் (பதிற்று!1,10) இராவணன் தன் செல்வச் செருக்கு வெளிப்படத் தேவ மகளிரை ஏவலர்கள் ஆக்கி வந்தனன். பிராட்டி மயங்காது வென்றாள். உலகச் சிறப்பை வெறுத்தவளே இறைவனுக்கு ஏற்றவள் என்பது பாவிகம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With Urvaci carrying his sword and following behind, Mēṉakai offering betel leaf,
- Tilōttamai walking along bearing his sandals, and a throng of heavenly nymphs crowding at his sides,
- while the fragrance poured out by camphor-sandal paste, saffron unguent and flowers all mingled
- filled the nostrils at the tips of the striped trunks of the elephants of the quarters, tusked like mountains —
What the poem says
This begins a long sentence running through many verses that describes Irāvaṇaṉ's procession into the grove. The celestial dancers serve him as attendants: Urvaci carries his sword, Mēṉakai hands him betel, Tilōttamai carries his sandals, and the other nymphs surround him.
The scent of his camphor-sandal paste, saffron and flowers is so strong that it reaches the trunks of the mighty elephants that hold up the four quarters of the world. Kampaṉ displays Irāvaṇaṉ's pride in his wealth, which Cītai, unmoved by worldly splendour, will defy.