கம்பராமாயணம் 5196 · சுந்தர 4.80
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நால் இருகோடிநங்கையர் - எட்டுக்கோடி பெண்கள்; நான நெய் விளக்கம் - புனுகுத் தைல விளக்கை; அங்கையின் எடுப்ப - அகங்கையில் ஏந்தவும்; (அப்பெண்களின்) மேல் - மேலே; நிவந்து எழுந்த - உயர்ந்து எழுந்த; மணியுடை - மணிகளைப் பெற்ற; அணியின் - ஆபரணங்களின்; விரிகதிர் - விரிந்த ஒளி; இருள் எலாம் - எல்லா இருளையும்; விழுங்க - உட்கொள்ளவும்; பற்பல - பலவிதமான; மங்கையர் - மகளிர்; கால்முதல் - பாதத்திலே; தொடர்ந்த - அணியப்பெற்ற, நூபுரம் சிலம்ப - சிலம்பு ஒலித்தலாலும்; கிண்கிணி - சதங்கை; கலையொடும் - மேகலையுடன்; கலிப்ப - ஒலித்தலாலும்; பால்நிறத்து அன்னக் குழாம் - வெண்ணிறமுடைய அன்னக்கூட்டம்; படர்ந்த என்ன - பரவினாற் போல; படர - சுற்றிச் சூழவும்.
நானநெய் - புழுகுநெய். நூபுரம் சிலம்ப, கலையொடும் கலிப்ப என்னும் எச்சங்கள் படர என்னும் எச்சத்தைக் கொண்டு முடிந்தன. பற்பல மங்கையர் நூபுரம் சிலம்ப, கலையொடும் கலிப்ப அன்னக் குழாம் படர்ந்த என்ன படர என முடிந்தது. கலை, மேகலை என்பதன் முதற் குறை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With eight crores of women holding lamps of scented civet oil in their palms,
- and the spreading rays of their jewelled ornaments, rising high above, swallowing all the darkness,
- with anklets ringing from their feet and tinkling bells jingling with their girdles,
- many, many women moved around him, like a flock of milk-white swans spreading out —
What the poem says
The procession continues. Eighty million women carry lamps fuelled with fragrant civet oil, and the light from their jewels drives away all darkness.
Their anklets ring and the little bells on their girdles chime as they walk, and they spread around Irāvaṇaṉ like a flock of white swans.