கம்பராமாயணம் 5198 · சுந்தர 4.82

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நீல் நிறக் குன்றின் நெடிது உறத் தாழ்ந்த நீத்த வெள் அருவியின் நிமிர்ந்த
பால் நிறப் பட்டின் மாலை உத்தரியம் பண்பு உறப் பசும்பொன் ஆரத்தின்
மால் நிற மணிகள் இடை உறப் பிறழ்ந்து வருகதிர் இளவெயில் பொருவச்
சூல்நிறக் கொண்மூக் கிழித்து இடை துடிக்கும் மின் என மார்பின் நூல் துளங்க.

பொருள் · Meaning in Tamil

நிமிர்ந்த - உயர்ந்த; பால்நிறம் - வெண்ணிறம் பெற்ற; பட்டு உத்தரியமாலை - பட்டு அங்கவத்திர வரிசை; நீல்நிறக் குன்றின் - நீலநிறமுடைய மலையில், உற நெடிது தாழ்ந்த - மிகுதியாக உயர்ந்து தாழ்ந்த; வெள் - வெண்மையான; நீத்த அருவியின் - வெள்ளத்தைப் பெற்ற அருவியின்; பண்புற - இயல்பை அடையவும்; பசும் பொன் ஆரத்தின் - பசும்பொன்னாற் செய்யப்பட்ட ஆரத்திலே உள்ள; மால் நிற மணிகள் - பெருமைமிக்க நிறத்த இரத்தினங்கள்; இடை - இடையிடையே; உற பிறழ்ந்து - நன்றாக ஒளியை வீசி; வளர் கதிர் - உதிக்கின்ற சூரியனின்; இளவெயில்பொருவ - மெல்லிய மஞ்சள் வெயிலை ஒத்திருக்கவும்; மார்பின் நூல் - மார்பில் உள்ள பூணூல்; சூல் நிறக் கொண்மூ - கருக்கொண்ட மேகத்தை, கிழித்து - பிளந்து கொண்டு; இடை துடிக்கும் - (அதன்) நடுவில் பளிச்சிடும்; மின் என - மின்னலைப் போல; துளங்க - அசையவும்.

பட்டின் என்பதில் உள்ள இன்: அசை. 'நுசிப்பினை ஓசிய வீங்கி' என்பது சிந்தாமணி (459) 'நுசுப்பு வீங்கி' என்பது பொருள். இனியர் இன்னும் ஐயும் அசைச்சொல் என்றார். உத்தரியம் - மேலாடை. அது பட்டு. 'உத்தரியப் பட்டு ஒருபால் ஒளிர' என்பர் பட்டினத்தடிகள். உத்தரியம் என்பது மேலாடை. இஃது இடது தோளிலிருந்து இடுப்புவரை தொங்கி முதுகுப் பக்கத்தில் தொடர்ந்து வந்தடையும். இதற்கு மாற்றாக உத்தரியம் போல் முத்து வடங்களே அமைந்திருப்பதைச் சிற்பங்களில் காணலாம். இது முத்தினாலான உத்தரியம் ஆனதால் 'மெளத்தி சோத்தரீயம்' எனப்படும் (சிற்பச் செந்நூல் 96)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. His milk-white silk upper cloth hanging in folds like a full white waterfall tumbling long and far down a blue-black mountain,
  2. and, set fittingly in his chain of fresh gold,
  3. the dark-hued gems flashing here and there like the soft light of the rising sun,
  4. while the sacred thread on his chest quivered like lightning that tears open a pregnant raincloud and flickers within it —

What the poem says

More of Irāvaṇaṉ's finery: his white silk upper garment falls over his dark body like a broad white waterfall pouring down a blue-black mountain.

Gems in his golden necklace flash like the gentle early sunlight, and the sacred thread across his chest shimmers like lightning splitting a heavy dark cloud. The commentary describes how such an upper cloth was worn, from the left shoulder across to the waist and round the back.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nīl niṟak kuṉṟiṉ neṭitu uṟat tāḻnta nītta veḷ aruviyiṉ nimirnta
pāl niṟap paṭṭiṉ mālai uttariyam paṇpuṟap pacumpoṉ ārattiṉ
māl niṟa maṇikaḷ iṭai uṟap piṟaḻntu vaḷarkatir iḷaveyil poruvac
cūlniṟak koṇmūk kiḻittu iṭai tuṭikkum miṉ eṉa mārpil nūl tuḷaṅka.