கம்பராமாயணம் 5199 · சுந்தர 4.83
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தோள் தொறும் - தோள்கள்தோறும்; தொடர்ந்த - அணியப்பெற்ற; மகரிகை - சுறாமீன் வடிவமாக அமைந்த, வயிர - வயிரம் பதிக்கப் பெற்ற; கிம்புரி வலயம் - தோள் வலயத்தினுடைய; மாச்சுடர்கள் - சிறந்த ஒளிகள்; கலிகெழு விசும்பில் - ஒலிக்கு ஆதாரமாகிய ஆகாயத்தில்; நாள் தொறும் - தினந்தோறும்; சுடரும் - விளங்குகின்ற; நாளொடு கோளினை - நட்சத்திரங்களையும் கிரகங்களையும்; நக்க - அடக்கவும்; தாள் தொறும் - பாதங்கள் தோறும்; தொடர்ந்த - அணியப்பெற்ற, தயங்கு - ஒளிவீசும்; பொன்கழலின் - அழகிய வீரக் கழலின்; தகை ஒளி - சிறந்த ஒளி; நெடுநிலம் தடவ - பெரிய பூமியை அளவளாவவும்; கேள் தொறும் - எல்லாச் சுற்றத்தினரோடும்; தொடர்ந்த - இடைவிடாது செல்லும்; முறுவல் வெள்நிலவின் - புன்னகையின் வெள்ளிய நிலவால், முகமலர் - (இராவணனின்) முகமாகிய மலர்; இரவினும் கிளர - இரவுப் போதிலும் விளங்கெ தோன்ற.
கோளினை நக்க என்ற தொடரில் உள்ள 'நக்க' என்பது 'அடக்க' எனப்படும் பொருள் தந்தது. பால்நக்க தீஞ்சொல் - மான் நக்க நோக்கின் மடவார் (சிந்தாமணி - கனகமாலை 310) நாள் - நட்சத்திரம். கோள் - கிரகங்கள். வயிரக்கிம்புரி - தோள்வலயம் (வாகுவலயம்)
ஆங்கிலம் · English translationAI
Translation
- The great radiance of the diamond-studded makara armlets on shoulder after shoulder
- outshining the stars and planets that blaze day after day in the roaring sky,
- the fine light of the ringing golden anklets on foot after foot caressing the wide earth,
- and his lotus faces, lit with a moonlight smile turned on kin after kin, glowing even in the night —
What the poem says
The jewels on Irāvaṇaṉ's many shoulders, shark-shaped armlets set with diamonds, outshine the stars and planets in the sky.
The light of the golden warrior anklets on his feet spreads across the ground, and his faces, smiling at each of his kinsfolk in turn, bloom like lotuses lit by a white moon even at night.