கம்பராமாயணம் 5200 · சுந்தர 4.84

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தன்நிறத்தோடு மாறுகொண்டு இமைக்கும் நீவி அம் தழைபட உடுத்த
பொன் நிறத் தூசு, கருவரை மருங்கில் தழுவிய புதுவெயில் பொருவ,
மின் நிறக் கதிரில் செற்றிய பசும்பொன் விரல்தலை அவிர் ஒளிக் காசின்
கல் நிறக் கற்றை, நெடுநிழல் பூத்த கற்பக முழுவனம் கவின.

பொருள் · Meaning in Tamil

தன் நிறத்தோடு - தன்னுடைய கரியநிறத்துடன்; மாறு தந்து - வேறுபாட்டை வழங்கி; இமைக்கும் - விளங்குகின்ற; நீவி - கொய்சகம்; அம் - அழகு; தழைபட - செழிப்புற்றுத் தோன்ற; உடுத்த - உடுக்கப் பெற்ற; பொன்நிறத்தூசு - பொன்னிறம் பெற்ற பட்டாடை, கருவரை மருங்கில் - கருத்த மலையின் சூழலில்; தழுவிய - சார்ந்துள்ள; புது வெயில் பொருவ - இளைய (மஞ்சள்) வெயிலை ஒப்பவும்; விரல்தலை - கையின்கண் அணியப் பெற்ற; மின் நிறம் - மின்னல் போன்ற நிறமுடைய; கதிரின் - ஒளி; சுற்றிய - சுற்றப்பெற்ற; பசும்பொன் - பசுமையான கடகத்தில் பதித்த; அவிர் ஒளி - மிக்க ஒளியையுடைய; காசின்கல் - இரத்தினக் கற்களின்; நிறக் கற்றை - நிறங்களின் தொகுதி; நெடுநிழல் - மிக்க ஒளியை, பூத்த - வெளிப்படுத்திய; முழு - பெரிய; கற்பகவனம் - கற்பகவனத்தைப் போல; கவின - அழகு பெறவும்.

இராவணனின் மோதிரங்களில் பதித்த மணியின் ஒளியானது கற்பகவனத்தைப் போல அழகு பெறவும். பொன் - மோதிரம். நிழல் பூத்த - ஒளியை வெளிப்படுத்தும். புதுவெயில் என்றதனால் காலை மஞ்சள் வெயில் எனக் கொள்க. கற்பக முழுவனம் கடுப்ப என்று பாடம் கொண்டு இந்தக் குணங்களினாலே கற்பகச்சோலை ஒத்தான் இராவணன் என்று பழைய வுரை கூறும். (அடை - பதி) இப்பாடலின் பின் இரண்டு அடிகளில் மோதிரம் பேசப்பட்டது என்று பலர் கருதுகின்றனர். இராம பிரானின் கோலம் பேசும் பகுதியில் (கடிம. 57) கடகமும் கற்பகமும் நினைக்கப் பெறுகின்றன. கற்பகம் ஈன்ற தாம் என்னகைக் கடகம் மின்ன என்ற பகுதி நோக்கத் தக்கது. ஆதலின் இங்கு பசும்பொன் என்பது கடகமே. இங்கு விரல் என்றது கையையே. 'படை கொள் நோன் விரல்' என்னும் முல்லைப்பாடல் (முல்லை 77) நோக்குக. அங்கு இனியர் 'வலிய கை' என்று உரை வகுத்தார் தமிழ்த் தெய்வம். உ.வே.சா அடிப்பகுதியில் கணவனை நோக்கி இணைவிரல் கூப்பி என்னும் பெருங்கதையை மேற்கோள் காட்டினார் (பெருங் -4-7-30) விரல்தலை - கையின்கண். கதிரின் என்பதில் உள்ள 'இன்' அசை. கற்பினின் - (சிந்தா - 604) 'கதிர் சுற்றிய பசும்பொன்' என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The gold-hued cloth he wore, its pleated folds lush and lovely, gleaming in contrast with his own dark colour,
  2. like the fresh morning sunlight that clings around the flanks of a black mountain;
  3. and the gem-coloured cluster of bright jewels set in the fresh gold ringed with lightning-bright rays on his hands
  4. beautiful as a whole grove of wishing-trees blossoming with long shadows of light —

What the poem says

Irāvaṇaṉ's golden silk garment, gathered in rich pleats, stands out against his dark skin like early sunlight spread around a black mountain.

The jewels set in the gold he wears on his hands, perhaps rings, though the commentary argues for bracelets, throw off so many colours that they look like a whole forest of the heavenly kaṟpakam trees in bloom.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1taṉniṟattōṭu māṟu tantu imaikkum nīvi am taḻaipaṭa uṭutta
poṉ niṟat tūcu, karuvarai maruṅkil taḻuviya putuveyil poruva,
miṉ niṟak katiriṉ cuṟṟiya pacumpoṉ viraltalai avir oḷik kāciṉ
kal niṟak kaṟṟai, neṭuniḻal pūtta kaṟpaka muḻuvaṉam kaviṉa.