கம்பராமாயணம் 5201 · சுந்தர 4.85
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சன்ன வீரத்த - 'சன்னவீரம்' என்னும் உறுப்பைப் பெற்ற; வெண்தரளக் கோவை - வெண்மையான முத்தால் அமைந்த வீர சங்கிலி; ஊழியின் இறுதியில் - யுகத்தின் முடிவிலே; தனித்த - தனியாக உள்ள; நெடு பொன் வரையில் - பெரிய மேரு மலையில்; தொத்திய - பற்றியுள்ள; கோளும் நாளும் ஒத்து - கிரகங்களையும் நட்சத்திரங்களையும் ஒத்து; இடையிடை - மற்ற ஆபரணங்களின் நடுவிலே; பொலிய - விளங்கவும், மின் - மின்னலைப் போல; ஒளிர் மெளலி - விளங்கும் பத்துக் கிரீடங்கள்; உதய மால் வரையின் - உதயகிரியின்; மீப்படர் - மேலே பரவிய, வெங்கதிர்ச் செல்வர் - கதிரையே செல்வமாகப் பெற்ற சூரியர்கள்; பன்னிருவரின் - பன்னிருவர்களுக்குள்ளே; இருவரைத் தவிர்வுற்று - இருவர் நீங்க (மற்றை பதின்மர்); உதித்தது ஓர்படி - உதித்த ஒப்பற்ற இயல்புடன்; ஒளி பரப்ப - ஒளியைப் பரவச் செய்யும்.
சன்னவீரம் - வீரசங்கிலியில் அமையும் ஓர் உறுப்பு. கழுத்தினைச் சுற்றியும், மார்பணிகளைச் சுற்றியும் உடலின் ஒரு மூலையிலிருந்து எதிர் மூலைக்குக் குறுக்கே சென்று முதுகிலும் அங்ஙனமே அமைந்த இரு சங்கிலிகளின் பெயர் வீரசங்கிலி, இச்சங்கிலி ஸ்தனத்திலிருந்து கீழ்விரல் அளவு கீழே தொங்கிச் செல்லும். இதற்குச் 'சன்னவீரம்' என்றும் பெயர் உண்டு. (சிற்பச் செந்நூல் 94)
ஆங்கிலம் · English translationAI
Translation
- The string of white pearls on his crossed hero's chain shining here and there among his ornaments, like the planets and stars
- that cling to the lone tall golden mountain at the end of the age,
- and his lightning-bright crowns spreading light as though, of the twelve suns
- that blaze above the great Mountain of Sunrise, all but two had risen together —
What the poem says
Irāvaṇaṉ wears a hero's chain of white pearls crossing his chest, the cannavīram, which gleams among his other jewels like stars and planets clustered round Mount Mēru when everything else has been destroyed at the end of an age.
His ten shining crowns are compared to ten of the twelve suns of Hindu cosmology rising together over the eastern mountain.