கம்பராமாயணம் 52 · பால 2.32
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கன்றுடைப் பிடி நீக்கி - கன்றுடைய பெண் யானைகளை நீக்கிவிட்டு; களிற்றினம் வன் தொடர்ப் படுக்கும் - ஆண் யானைகளை வலிய சங்கிலிகளால் கட்டுகின்ற; வன வாரி சூழ் - காட்டிலே யானைகளை அகப்படுத்தும் இடங்களைச் சூழ்ந்த; குன்றுடைக் குல மள்ளர் - மலையை வாழும் இடமாகக் கொண்ட நல்ல வீரர்களின்; குழூஉக் குரல் - கூட்டம் எழுப்பும் ஆரவாரம்; இன் துணைக் களி அன்னம் - இனிய துணையாகிய பெண் அன்னங்களுடன் மகிழ்ந்திருக்கும் ஆண் அன்னங்களை; இரிக்கும் - (அச்சத்தால் நிலை கெட்டு) ஓடச் செய்யும்.
பிடிகளையும் கன்றுகளையும் விடுத்துக் களிறுகளை மள்ளர்கள் சங்கிலியால் பிணிக்கும்போது எழும் ஆரவார ஓசையால் களித்திருக்கும் அன்னம் அச்சத்தால் நிலை கெட்டு ஓடும் என்பது கருத்து. குறிஞ்சியும் (களிறுகள்) மருதமும் (அன்னம்) மயங்கிய திணை மயக்கம். தொடர்: சங்கிலி. வாரி: யானைப் பிடிக்க வெட்டப்படும் குழி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Setting aside the cow elephants with calves, the herds of tuskers
- they bind in strong chains; around the forest traps
- the clamour raised by bands of the hill country's warriors
- sends the swans, happy with their sweet mates, fleeing.
What the poem says
In the hill forests, men capture wild elephants in pit traps. They let the mothers and calves go and bind only the bull tuskers in heavy chains. The shouting of the hunting parties is so loud that it carries down to the farmland, where it frightens the swans enjoying themselves with their mates and sends them flying. The verse joins a hill-country scene with a farmland one.