கம்பராமாயணம் 53 · பால 2.33
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வள்ளி கொள்பவர் - வள்ளிக் கிழங்கை அகழ்ந்து எடுப்பவர்கள்; கொள்வன மாமணி - பெறுவது உயர்ந்த மணிகளாகும்; தூங்கிய மாங்கனி - கிளைகளில் தொங்கும் மாம்பழங்கள்; துள்ளி கொள்வன - தேன் துளிகளைக் கொண்டிருக்கும்; பொன்விரி புன்னைகள் - பொன் நிற மகரந்தங்களைப் பரப்பும் புன்னை மலர்கள்; புள்ளி கொள்வன - புள்ளிகளைப் பெற்றிருக்கும்; அன்னம் - அன்னப் பறவைகள்; பங்கயத்து - தாமரை மலர்களிலே; பள்ளி கொள்வன - தூங்கியிருக்கும்.
வள்ளிக் கிழங்குபெற நிலந் தோண்டுபவர்க்குப் பெருமதிப்புடைய மணிகள் கிடைக்கின்றன. சிறந்த மாங்கனி: தேனெனச் சொட்டும் சாறு கொண்டவை.....துள்ளி என்ற சொல்லுக்கு ஆமை என்ற பொருளும் உண்டு. அவ்வாறு கொண்டால் ஆமைகள் உண்ணுவதற்கு மாங்கனி கிடைக்குமெனப் பொருள் உரைக்க. வள்ளி, புன்னை, பங்கயம் - ஆகு பெயர்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Those who dig for vaḷḷi yams take up great gems;
- the hanging mangoes hold drops of honey;
- the punnai flowers spreading golden pollen are flecked with spots;
- on the lotuses the swans lie down to sleep.
What the poem says
Four small pictures of plenty, each built on the verb "take" or "hold". Those who dig for wild yams in the hills turn up precious gems instead. Ripe mangoes hanging on the trees are full of honey-sweet juice. Punnai flowers by the shore are speckled with golden pollen, and swans sleep on the lotuses.
The word for "drop" can also mean "tortoise", which gives another reading: the tortoises take the fallen mangoes for food.