கம்பராமாயணம் 54 · பால 2.34
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கடைசியர் குரவை - மருத நில மாதர்களின் குரவைக் கூத்துப் பாடல்; கொன்றை வேய்ங்குழல் கோவலர் முன்றிலில் - கொன்றையாலும் மூங்கிலாலும் ஆகிய குழல்களை உடைய இடையர்களின் வீட்டு முற்றங்களில்; கன்று உறக்கும் - கன்றுகளை உறங்கச் செய்யும்; நுளைச்சியர் செவ்வழி - நெய்தல் நில மகளிர் பாடும் செவ்வழிப் பண் கொண்ட பாடல்; புன் தலைப் புனம் - சிற்றிடம் கொண்ட புனங்களிலும்; காப்புடைப் பொங்கரில் - காவல் உடைய சோலைகளிலும்; சென்று இசைக்கும் - பரந்து சென்று ஒலிக்கும்.
கொன்றைக் கனியையும் மூங்கிலையும் துருவித் துளையிட்டுக் குழல் செய்வர். உறக்கும் - உறங்கச் செய்யும். செவ்வழிப் பண் காலை நேரத்துக்கு உரியது.
முல்லையும் (கொன்றை) மருதமும் (கடைசியர்) நெய்தலும் (நுளைச்சியர்) கலந்த திணை மயக்கம். முன்றில் - இல்முன் என்பதன் போலி. உறக்கும் - பிறவினை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- In the courtyards of herdsmen who play flutes of koṉṟai and bamboo
- the kuravai songs lull the calves to sleep, the songs of the farm women;
- and over the small hill plots and the guarded groves
- spreads the cevvaḻi melody of the fisher women.
What the poem says
Music drifts across the regions of the land. The kuravai, a round-dance song of the farm women, carries into the courtyards of the cowherds, who play flutes made of bored koṉṟai pods and bamboo, and sends their calves to sleep. The cevvaḻi songs of the fisher women spread over the little hill fields and the guarded groves. Songs from the farmland, the pastures and the seashore mingle, another mixing of landscapes.