கம்பராமாயணம் 55 · பால 2.35

Section பால காண்டம் / 2. நாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சேம்பு கால்பொரச் செங்கழுநீர்க் குளத்
தூம்பு காலச் சுரி வளை மேய்வன,
காம்பு கால் பொர கண் அகன் மால்வரைப்
பாம்பு நான்று என பாய் பசும் தேறலே.

பொருள் · Meaning in Tamil

காம்பு கால் பொர - மூங்கில் புதரில் காற்று மோதுதலால் (தேன்கூடு சிதைய); கண் அகல் மால் வரை - விசாலமான பெரிய மலைகளிலிருந்து; பாம்பு நான்றென - பாம்புகள் தொங்குவது போன்ற தோற்றத்துடன்; பாய் பசுந் தேறல் - பாய்கின்ற புதிய தேன் ஒழுக்கினையே; சேம்பு கால் பொர - சேப்பங் கொடியின் மடல்கள் ஒடியும்படி; செங்கழுநீர்க் குளத் தூம்பு கால் - செங்கழு நீர்ப் பூக்கள் கொண்ட குளத்தின் மதகுகளிலிருந்து பரவும் வாய்க்கால்களில்; சுரி வளை மேய்வன - வளைந்த சங்குகள் மேய்கின்றன.

'பசுந் தேறலைச் சுரி வளை மேய்வன' எனக் கூட்டிப் பொருள் கொள்க. தூம்பு மதகு. மூங்கில் காற்றில் ஆடும்போது மலையில் தொடுத்த தேனடை சிதைந்து தேன் சொரிகிறது. தேனின் தாரை பாம்பு தொங்குவது போல் இருக்கிறது. மலை உச்சியிலிருந்து சொரியும் தேன், சேம்பு ஒடியும்படி வேகமாகப் பாய்ந்து வர, அத் தேனைச் சங்கு மேய்கிறது. உயர்வு நவிற்சிதான்; எனினும், சுவையான கற்பனை. தேறலே; பிரிநிலை ஏகாரம்; அப்படி வரும் தேனைத் தவிர வேறு எதனையும் சங்கு உண்ணவில்லை என்பது பிரிநிலை ஏகாரக் குறிப்பு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Snapping the stalks of the taro, in the channels that run
  2. from the sluices of the red-lily tanks, the curled conches graze
  3. on what flows when the wind beats on the bamboo of the broad, great mountain:
  4. the fresh honey that pours down like hanging snakes.

What the poem says

High on the mountain, the wind sways the bamboo and breaks open the honeycombs, and streams of honey hang down the cliffs like dangling snakes. The honey rushes down so hard that it snaps the stalks of the taro plants. It flows into the channels below the lily tanks, where the conches feed on it and on nothing else. The commentator admits this is exaggeration, but a delightful one.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cēmpu kāl porac ceṅkaḻunīrk kuḷat
tūmpu kāla, curi vaḷai mēyvaṉa,
kāmpu kāl pora, kaṇ akal māl varai
pāmpu nāṉṟeṉa pāy pacun tēṟalē.