கம்பராமாயணம் 5203 · சுந்தர 4.87

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அம் கயல் கரும் கண் இயக்கியர், துயக்கு இல் அரம்பையர் விஞ்சையர்க்கு அமைந்த
நங்கையர், நாக மடந்தையர், சித்த நாரியர், அரக்கியர் முதலாம்
குங்குமக் கொம்மைக் குவிமுலைக் கனிவாய்க் கோகிலம் துயர்ந்த மென் குதலை
மங்கையர் ஈட்டம் மால்வரை தழீஇய மஞ்ஞை அம் குழு என வயங்க.

பொருள் · Meaning in Tamil

அம் கயல்கருங்கண் - அழகிய மீன் போன்ற கருங்கண்களைப் பெற்ற; இயக்கியர் - யட்சப் பெண்கள்; துயக்கு இல் - தளர்ச்சி இல்லாத; அரம்பையர் - தேவ மகளிர்; விஞ்சையர்க்கு அமைந்த - வித்தியாதரர்க்கு உரிய; நங்கையர் - மகளிர்; நாகமடந்தையர் - நாகலோகக் கன்னியர்கள்; சித்த நாரியர் - சித்த குலப் பெண்கள்; அரக்கியர் முதலாம் - அரக்கியர் முதலான; குங்குமம் - குங்குமச் சாந்து அணியப் பெற்றதும்; கொம்மை - பருத்ததும்; குவி முலை - திரண்டதும் ஆகிய தனங்களையும்; கனிவாய் - கோவைப்பழம் போன்ற வாயையும்; கோகிலம் துயர்ந்த குதலை - குயில்கள் வருந்தும் மொழிகளையும் உடைய; மங்கையர் ஈட்டம் - மகளிரின் தொகுதி; மால் வரைதழீஇய - கருத்த மலையைச் சார்ந்த; மஞ்ஞை அம் குழுஎன - அழகிய மயில் கூட்டம் போல; வயங்க - விளங்கவும்.

துயக்கு - தளர்ச்சி. 'துயக்கு அற அறிந்து' (மணிமேகலை 27-19) கோகிலம் வருத்தம் அடைவதற்கு ஏதுவான மொழி. துயர்ந்த - வருந்த 'ஆறாது துயரும் என் உள்' (அகம் 195)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Yakṣa women with lovely dark carp-shaped eyes, tireless heavenly nymphs, the maidens
  2. of the Vidyādharas, the daughters of the Nāgas, the women of the Siddhas, ogresses and the rest —
  3. a host of women with full rounded saffron-painted breasts, fruit-red lips and soft lisping speech that pains the cuckoo —
  4. clustered round him like a lovely flock of peacocks around a great dark mountain —

What the poem says

Women of every race of beings attend Irāvaṇaṉ: yakṣīs, celestial nymphs, Vidyādhara and Nāga maidens, Siddha women and ogresses.

With their saffron-painted breasts, red lips and speech so sweet that the cuckoo is put to shame, they gather round his dark bulk like peacocks round a black mountain.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1am kayal karuṅ kaṇ iyakkiyar, tuyakku il arampaiyar viñcaiyarkku amainta
naṅkaiyar, nāka maṭantaiyar, citta nāriyar, arakkiyar mutalām
kuṅkumak kommaik kuvimulaik kaṉivāyk kōkilam tuyarnta meṉ kutalai
maṅkaiyar īṭṭam mālvarai taḻīiya maññai am kuḻu eṉa mayaṅka.