கம்பராமாயணம் 5204 · சுந்தர 4.88

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தொளை உறு புழை வேய் தூங்கு இசைக் கானம் துயல் உறாது ஒருநிலை தொடர,
இளையவர் மிடறும் இன் நிலை இயக்கக் கின்னரம் முறை நிறுத்து எடுத்த
கிளை உறு பாடல், சில் அரிப் பாண்டில் தழுவிய முழவொடும் கெழுமி
அளை உறை அரவும் அமுது வாய் உகுப்ப, அண்டமும் வையமும் அளப்ப.

பொருள் · Meaning in Tamil

தொளையுறு - தொளைகளைப் பெற்ற; புழைவேய் - உள்ளீடற்ற புல்லாங்குழலின் கண்ணே; தூங்கு இசைக் கானம் - மந்த கதியில் அமைந்த இசை; துயல் உறாது - தொய்வு அடையாதபடி; ஒரு நிலை தொடர - ஒப்பற்ற பண்புடன் தொடரவும்; இந்நிலை - இதே நிலையில்; இளையவர் மிடறும் - மகளிரின் கண்டமும்; இசைப்ப - பாடவும்; கின்னரர் - கின்னரர் எனும் தேவசாதியினர்; முறை நிறுத்த எடுத்த - ஒழுங்கு அமைய எடுத்த, கிளை உறு பாடல் - இளிக்கிரமத்தில் அமைந்த பாட்டு; சில்லரி - சில்லரி என்னும் சிறு தோற்கருவியுடனும்; பாண்டில் தழுவிய - கைத் தாளத்துடனும் கூடிய; முழவுடன் - மத்தளத்துடனும்; கெழுமி - ஒன்றுபட (அதனால்); அளை உறை அரவும் - புற்றின்கண் உள்ள பாம்பும்; வாய் - வாயின்கண்ணே; அமுது உகுப்ப - அமுதத்தைக் கொட்டவும்; (அவரிகை அண்டமும் - அண்டங்களையும்; வையமும் - நிலவுலகத்தையும்; அளப்ப - தனக்குள் கட்டுப்படுத்தவும்.

இசை, சுத்தம், சாளவம், தமிழ் என்று மூவகை பேசப்படுகிறது. அவற்றுள் சுத்தம் தரங்கிசை. சுத்தமாவது ஓசையை உச்சரித்து நாசியிலே ஓட்டிச் சிரத்தையும் நாபியையும் சம்பித்துத் தூங்கிசையாகப் பாடுவது (பஞ்சமரபு) சில்லரி - வட்ட வடிவமான தோற்கருவி - சில்லரி கறங்கும் (அகம் 301) தமிழ்இசை (145 பக் பாண்டில் - கைத்தாளம். நுண் உருக்குற்ற விளங்கு அடர்ப்பாண்டில் (மலைபடுகடாம் 4) பாண்டில், தாளம் என்றே அழகர் வரைந்தார் (பரிபாடல் 15 - 42) கிளை உறு பாடல் இளிக்கிரமத்திற் பாடப் பெற்ற பாடல். கிளை என்னும் சொல்லுக்கு பரிபாடலில் (11 - 127) இளையாகிய இளி என விளக்கினார் யாழ் நூல் - குரற்கிரமம். இளிக்கிரமம் விளரிக்கிரமம் - என்று மூன்று கிரமம் பற்றிப் பேசும் (பக் 82). இளிக்கிரமம் 97 ஆம் பக்கத்தில் விவரிக்கிறார். இளி ஒன்றி நின்ற இசை (யாழ் நூல் - தெய்வ -2)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The slow, lingering melody of the holed hollow flute flowing on steadily without a falter,
  2. the throats of young women singing in that same sweet mode, and the songs in their proper scale
  3. raised in due order by the Kinnaras, blending with the small drum, the hand-cymbals and the tabor,
  4. so that even the snake in its hole poured nectar from its mouth, and the music filled the heavens and the earth —

What the poem says

Music accompanies the procession: the slow, sustained notes of the bamboo flute, the voices of young women, and the songs of the Kinnaras, celestial musicians, set in a precise scale and joined by the small round cilla drum, hand-cymbals and the muḻavu drum.

The music is so sweet that even a snake in its burrow spills nectar instead of venom, and it fills the whole universe. The commentary explains the technical musical terms from old Tamil treatises.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1toḷai uṟu puḻai vēy tūṅku icaik kāṉam tuyal uṟātu orunilai toṭara,
iḷaiyavar miṭaṟum iṉ nilai icaippak kiṉṉarar muṟai niṟuttu eṭutta
kiḷai uṟu pāṭal, cillarip pāṇṭil taḻuviya muḻavoṭu keḻumi
aḷai uṟum aravum amutu vāy ukuppa, aṇṭamum vaiyamum aḷappa.