கம்பராமாயணம் 5205 · சுந்தர 4.89

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அன்ன பூஞ் சதுக்கம், சாமரை, உக்கம், ஆதியாம் வரிசையின் அமைந்த
உன்னரும் பொன்னின் மணியினில் புனைந்த இழைக்குலம் மழைக் கரும் கடைக்கண்
மின் இடைச் செவ்வாய்க் குவி முலைப் பணைத்தோள் வீங்கு தேர் அல்குலார் தாங்கி,
நல் நிறக் காரின் வரவு கண்டு உவக்கும் நாடக மயில் என, நடப்ப.

பொருள் · Meaning in Tamil

உன்னரும் - கற்பனை செய்ய முடியாத; பொன்னின் - பொன்னாலும்; மணியினின் - மணியினாலும்; புனைந்த - செய்யப்பெற்ற; இழைக்குலம் - ஆபரணங்களையும்; மழைக் கருங்கடைக்கண் - குளிர்ந்த கருத்த கடைக்கண்களையும்; மின்இடை - மின்னல் போன்ற இடையையும்; செவ்வாய் - சிவந்த வாயையும்; குவிமுலை - குவிந்த தனங்களையும்; பணைத்தோள் - மூங்கில் போன்ற தோள்களையும்; வீங்கு தேர் அல்குலார் - பெரிய தேர் போன்ற அல்குலையும் உடைய மகளிர்; அன்ன - அப்படிப்பட்ட; பூஞ்சதுக்கம் - அழகிய மணை; சாமரை - சாமரை; உக்கம் - ஆலவட்டம்; ஆதி ஆம் - முதலான; வரிசையின் அமைந்த - முறைப்படி அமைந்த பொருள்களை; தாங்கி - சுமந்து கொண்டு; நல்நிறக்காரின் - கரிய நிறமுடைய மேகத்தின்; வரவுகண்டு - வருகையைப் பார்த்து; உவக்கும் - மகிழ்ச்சியடையும்; நாடக மயில் என - ஆடும் மயில்களைப் போல; நடப்ப - நடந்து வரவும்.

உக்கம் - ஆலவட்டம். உக்கமும் தட்டொளியும் தந்து (திருப்பாவை) கவிஞன் தன் உள்ளம் கருதியதைச் சுட்டிக் கூறுவான். அதை உளமறி சுட்டு என்பர். இங்கே அன்ன என்பதுவும் அது. மழை - குளிர்ச்சி. சவுக்கம் என்று பாடம் கொண்டு நாற்கோணமான விதானம் என்று பொருள் கூறப்பெற்றது (அடை - பதி) பூஞ்சவுக்கம் - பூவினாற் செய்த இளைப்பாறும் இடம் என்பது பழைய உரை - (அடை - பதி)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Such things as the lovely seat, the yak-tail whisks, the round fans and the rest, all set in their due order,
  2. together with masses of ornaments made of unimaginable gold and gems — women with cool dark-cornered eyes,
  3. lightning waists, red lips, rounded breasts, bamboo shoulders and broad chariot-like hips carried them,
  4. and walked like dancing peacocks rejoicing to see the coming of a fine dark raincloud —

What the poem says

Beautiful women walk in the procession carrying the emblems of royal attendance: a flowered seat, yak-tail whisks, round fans, and ornaments of gold and gems.

They move like peacocks that dance with joy at the approach of a dark raincloud, the cloud here being Irāvaṇaṉ himself.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉṉa pūñ catukkam, cāmarai, ukkam, ātiyām varicaiyiṉ amainta
uṉṉarum poṉṉiṉ maṇiyiṉiṉ puṉainta iḻaikkulam maḻaik karuṅ kaṭaikkaṇ
miṉ iṭaic cevvāyk kuvi mulaip paṇaittōḷ vīṅku tēr alkulār tāṅka,
nal niṟak kāriṉ varavu kaṇṭu uvakkum nāṭaka mayil eṉa, naṭappa.