கம்பராமாயணம் 5230 · சுந்தர 4.114
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பழிபார்க்கலான் - தன்பால் வரும் பழியைப் பாராத இராவணன்; மூன்று உலகும் - மூன்று உலகத்தவர்களையும், குடிமை செயும் - குடிமக்களாக வைத்து ஆளும்; கொற்றத்து - வெற்றியைப் பெற்ற; என் - என்னுடைய; அடிமை - அடியனாம் தன்மையை, கோடி - கொள்க; அருளுதியால் எனா - அருள்வாயாக என்று கூறி; முடியின்மீது - தலைகளின் மேல்; முகிழ்த்து - குவித்து; உயர் கையினன் - உயர்ந்த கைகளை உடையவனாய், படியின்மேல் - பூமியின் மேல்; விழுந்தான் - விழுந்து வணங்கினான்.
குடிமை - குடிமக்கள். அடிமை என்றும் கொள்ளலாம். குடிமை செயும் கொடும் புலையன் (அரிச்சந்திரபுராணம் சூழ்வினை - 70) அடிமை - தொண்டு. என்றார்க்கு 'அடிமை புகுத்திவிடும்' என்னும் குறட் பகுதிக்குக் (608) காலிங்கர் 'பகை வேந்தர்க்குத் தான் ஏவல் கேட்டுப் பணிந்து ஒழுகும் அடிமை புகுத்திவிடும்' என்று விளக்கம் செய்தார். அழகர் அடிமை - அடியனாம் தன்மை என்பர். அருளுதியால் - இதில் உள்ள ஆல் அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Take as your slave me, whose conquering might
- makes all three worlds my subjects; show me grace!' he said,
- and with his hands folded and raised above his crowns,
- he fell upon the ground, heedless of disgrace.
What the poem says
Irāvaṇaṉ, conqueror of the three worlds who holds them as his subjects, offers himself to Cītai as her slave and begs for her favour.
Raising his joined hands above his crowned heads, he throws himself full length on the ground before her, caring nothing for the shame this brings on him.