கம்பராமாயணம் 5229 · சுந்தர 4.113

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தேவர் தேவியர் சேவடி கைதொழும்
தாவு இல் மூவுலகின் தனி நாயகம்
மேவுகின்றது நுன்கண் விலக்கினை
ஏவர் ஏழையர் நின்னின்? இலங்கு இழாய்!

பொருள் · Meaning in Tamil

இலங்கிழாய்! - விளக்கமான ஆபரணம் அணிந்த பெண்ணே; தேவர் - தேவர்களும்; தேவியர் - தெய்வப் பெண்களும்; சேவடி கை தொழும் - உன் சிவந்த அடிகளைக் கை கூப்பி வணங்கும்படியான; தாவு இல் - அழிவு இல்லாத; மூ உலகின் - மூன்று உலகங்களின்; தனி நாயகம் - ஒப்பற்ற தலைமைப் பதவி; நுன்கண் மேவுகின்றது - உன்பால் வந்து சேர்கின்றது; விலக்கினை - அதனை ஒதுக்கி விட்டாய்; நின்னின் - உன்னைப் போல; ஏழையர் - அறிவற்றவர்கள்; ஏவர் - யாவர்.

நாயகம் - தலைமைப் பதவி. மூவுலகுக்கும் தரும் ஒரு நாயகமே (திருவாய்மொழி - 3.10.11) தாவு - அழிவு தாவா நல்லறம் (சிலம்பு 30;125) ஏழை - அறிவற்றவர் 'ஏமுற்றவரினும் ஏழை..... பகை கொள்பவன்' (குறள் 873)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Sole sovereignty over the three flawless worlds,
  2. where gods and goddesses would fold their hands to your red feet,
  3. comes to you of its own accord, and you push it away!
  4. Who could be more foolish than you, O lady of shining jewels?'

What the poem says

Irāvaṇaṉ ends this part of his plea by calling Cītai a fool. Supreme queenship over the three imperishable worlds, with gods and goddesses worshipping at her feet, is hers for the taking, and she rejects it.

The commentary cites a Kuṟaḷ couplet on the folly of making enemies, which turns the charge back on Irāvaṇaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tēvar tēviyar cēvaṭi kaitoḻum
tā il mūvulakiṉ taṉi nāyakam
mēvukiṉṟatu nuṉkaṇ vilakkiṉai
ēvar ēḻaiyar niṉṉiṉ? ilaṅku iḻāy!