கம்பராமாயணம் 5228 · சுந்தர 4.112

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தக்கது என் உயிர் வீடு உறத் தாழ்கிலாத்
தொக்க செல்வம் தொலையும்; ஒருத்தி நீ
புக்கு உயர்ந்தது எனும் புகழ் போக்கி வேறு
உக்கது என்னும் உறு பழி கோடியோ.

பொருள் · Meaning in Tamil

தக்கது என்உயிர் - சிறப்பு மிக்க என் உயிரானது; வீடு எனின் - (உன்னால்) அழிய; தாழ்கிலா - இழிவற்ற (என்னுடைய); தொக்க செல்வம் தொலையும் - திரண்ட செல்வம் அழிவடையும்; ஒருத்தி நீ - ஒப்பற்ற நீ; புக்கு உயர்ந்தது - வந்து சேர (இலங்கை) உயர்வடைந்தது; எனும் புகழ் - என்கின்ற புகழ் மொழியை; போக்கி - ஒதுக்கிவிட்டு; (சீதையால்) (இலங்கை) வேறு உக்கது - வேறுபட்டு அழிந்தது; என்னும் - என்று உலகம் பேசும்; உறு பழி - பெரும் பழிச்சொல்லை; கோடியோ - ஏற்றுக் கொள்வாயா.

சீதை பிறக்க இலங்கை அழிந்தது என்பது நாட்டு வழக்கு. கொள் - தி - கோடி. முதனிலை திரிந்த தொழிற்பெயர். உறு - மிகுதியை உணர்த்தும் உரிச்சொல். வள்ளுவர் 'உறுபசி' என்பர். (குறள் 734) உக்கது - அழிந்தது. காதல் கைகூடாமற் போனால் அழிவேன் என்கிறான். இவ்வளவு அன்புடைய என்னை நீ ஒதுக்கலாமா என்பது தொனி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'If my worthy life should end, my undiminished
  2. massed wealth will perish too; will you, peerless one, throw away
  3. the fame that says "Ilaṅkai rose high when she entered it"
  4. and take on instead the great blame that says "Through her it was ruined"?'

What the poem says

Irāvaṇaṉ threatens that if he dies of his longing, all his vast wealth and Ilaṅkai with it will be destroyed.

Cītai could be famous as the woman whose coming made Ilaṅkai great; instead, he says, she will be blamed forever as the woman who ruined it. Ironically, popular tradition does say just that Ilaṅkai fell because of Cītai.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1takkatu eṉ uyir vīṭu eṉiṉ tāḻkilāt
tokka celvam tolaiyum; orutti nī
pukku uyarntatu eṉum pukaḻ pōkki vēṟu
ukkatu eṉṉum uṟu paḻi kōṭiyō.