கம்பராமாயணம் 5232 · சுந்தர 4.116

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மல்லொடு திரள்தோள் வஞ்சன் மனம் பிறிது ஆகும் வண்ணம்
'கல்லொடும் தொடர்ந்த நெஞ்சம் கற்பின்மேல் கண்டது உண்டோ?
இல்லொடும் தொடர்ந்த மாதர்க்கு ஏய்வன அல்ல வெய்ய
சொல் இது தெரியக் கேட்டி! துரும்பு! 'எனக் கனன்று சொன்னாள்.

பொருள் · Meaning in Tamil

துரும்பு! - துரும்பு போன்றவனே, கல்லொடும் - கல்லுடனே; தொடர்ந்த - நட்புக் கொண்ட (உறுதியால்); நெஞ்சம் - (மகளிரின்) மனமானது; கற்பின்மேல் - கற்பைவிடச் சிறந்ததாக (வேறு ஒன்றை); கண்டது உண்டோ? - மதித்தது உண்டா; (உன் மொழிகள்) இல்லொடும் - நற்குடிப்பிறப்புடன்; தொடர்ந்த மாதர்க்கு - தொடர்புடைய மகளிர்க்கு, ஏய்ந்தன அல்ல - (நினைத்தற்கும்) ஏற்றவை அல்ல; வெய்ய சொல் - கொடுஞ்சொல் ஆகும்; தெரிய இது கேட்டி - (என் மொழியை) உள்ளம் உணர இம்மொழியை கேள்; என - என்று; மல் அடு - மல்லர்களை அழிக்கும்; திரள்தோள் வஞ்சன் - திரண்ட தோள்களையுடைய இராவணன்; மனம் - உள்ளமானது; பிறிது ஆகும் வண்ணம் - வேறுபாடு அடையும்படி; கனன்று சொன்னாள் - சினந்து பேசினாள்.

கண்டது - மதித்தது (லெக்ஸிகன் காண்க) இராவணன் மனம் மாறும்படி பேசினாள். இல் - குடி. 'இற்பிறந்தார்' (குறள், 951. 1044) கனன்று, வஞ்சன் மனம் பிறிதாகும் வண்ணம் சொன்னாள் என்று முடிக்க. பிராட்டி, இராவணனுக்கும் தனக்கும் நடுவில் துரும்பையிட்டுப் பேசியதாக வான்மீகம் பேசும். அதற்கேற்ப துரும்பினை நோக்கிச் சொல்வாள், என்று ஒரு பாடம் காணப்படுகிறது. ஒரு பெண்ணை விரும்பி வந்தவன் மனத்தை முறிக்கிறதற்கு, நெஞ்சம் திடமாயிருக்கிறதற்கு கற்பல்லாமல் வேறு ஒன்று இல்லை என்பது பழையவுரை (அடை - பதி)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So that the mind of the deceiver, whose massive shoulders crush wrestlers, might be turned, she said in fury:
  2. 'Has a heart that is bound fast as stone ever seen anything above chastity?
  3. Your cruel words are not fit for women bound to noble houses.
  4. Hear this and understand it, you blade of straw!'

What the poem says

Cītai speaks in anger, hoping to turn Irāvaṇaṉ's mind. A chaste woman's heart is as firm as stone and values nothing above her chastity; his cruel words are unfit to be heard by any woman of good family.

She calls him a blade of straw. In Vālmīki she places a blade of grass between herself and Irāvaṇaṉ and speaks to it rather than to him, and one manuscript reading here preserves that idea.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mal aṭu tiraḷ tōḷ vañcaṉ maṉam piṟitu ākum vaṇṇam
'kalloṭum toṭarnta neñcam kaṟpiṉmēl kaṇṭatu uṇṭō?
illoṭum toṭarnta mātarkku ēyvaṉa alla veyya
col itu teriyak kēṭṭi! turumpu! 'eṉak kaṉaṉṟu coṉṉāḷ.