கம்பராமாயணம் 5233 · சுந்தர 4.117

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அறிவிலாதாய் - அறிவற்றவனே! ஆரியன் பகழி - இராமபிரானின் அம்பு; மேருவை - மகா மேரு மலையை; உருவ வேண்டின் - துளையிடுதலை விரும்பினாலும்; விண் - ஆகாயத்தை; பிளந்து ஏகவேண்டின் - பிளந்து செல்லுதலை விரும்பினாலும்; ஈரெழு புவனம் யாவும் - பதினான்கு உலகங்களையும் இன்னும் யாவற்றையும், முற்றுவித்திடுதல் வேண்டின் - அழியச் செய்தலை விரும்பினும்; வல்லது - (அவற்றை நிறைவேற்றும்) ஆற்றல் உடையதாகும்; அறிந்திருந்து - (அதனை) அறிந்திருந்தும்; சீரிய அல்ல சொல்லி - சிறப்பற்றவற்றைப் பேசி; தலை பத்தும் - பத்துத் தலைகளும்; சிந்துவாயோ - சிந்திப் போகச் செய்து கொள்வாயோ.

உருவ, ஏக, என்பவை தொழிற்பெயர் எச்சம் போல் தோன்றுகிறது. தொழிற்பெயர் எச்சம் தோற்றம் பெறுமே இது உரைச் சூத்திரம். சில சுவடிகளில் உருவல், ஏகல் என்னும் பாடமும் காணப் பெறுகிறது. ஆரியன் - சிறந்தவன். கும்ப கர்ணன் இராவணனை ஆரிய! என்று விளித்து பேசினான். குற்றாலத்தைத் திரிகூடராசப்பர் கடவுள் ஆரிய நாடு என்று பேசினார். இராமன் அம்புக்கே இத்தகைய ஆற்றல் உண்டு என்றால் அவன் ஆற்றல் அளக்க ஒண்ணாதது என்பது குறிப்பெச்சம். எச்சத்தை வடநூலார் தொனி என்பர். இப்படிப்பட்ட பாடல்கள் இராவணன் சூழ்ச்சிப் படலத்தும் காணப் பெறுகின்றன. பிராட்டி இராவணன் தனக்கு உள்ளதாகக் கூறிய ஆற்றலை இராமன் (கம்ப. 3378) அம்புக்கு உளது என்கிறாள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'If it wished to pierce Mount Mēru, if it wished to split the sky and pass through,
  2. if it wished to bring all the twice-seven worlds to an end,
  3. the noble one's arrow could do it. You know this, and yet, witless one,
  4. will you speak unworthy words and have all ten of your heads scattered?'

What the poem says

Cītai warns Irāvaṇaṉ that a single arrow of Irāmaṉ, the noble one, could pierce Mount Mēru, tear open the sky or destroy all fourteen worlds.

Knowing this, does he still want to talk such nonsense and lose all ten heads? The implication is that if his arrow alone is so mighty, Irāmaṉ's own power is beyond measure. She turns back on him the very boast of world-destroying might he once made of himself.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mēruvai uruva vēṇṭiṉ, viṇ piḷantu ēka vēṇṭiṉ
īr eḻu puvaṉam yāvum muṟṟuvittiṭutal vēṇṭiṉ,
āriyaṉ pakaḻi vallatu; aṟintu iruntu aṟivu ilātāy!
cīriya alla collit talai pattum cintuvāyō?