கம்பராமாயணம் 5234 · சுந்தர 4.118

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அஞ்சினை ஆதலால் அன்று ஆண்தகை அற்றம் நோக்கி,
வஞ்சனை மான் ஒன்று ஏவி, மாயையால் மறைத்து வைத்தாய்;
உஞ்சனை போதி ஆயின், விடுதி! உன் குலத்துக்கு எல்லாம்
நஞ்சினை எதிர்ந்த போது நோக்குமோ நினது நாட்டம்?

பொருள் · Meaning in Tamil

அஞ்சினை - அச்சமுற்றாய்; ஆதலான் - ஆகையினாலே; அன்று - அன்றைய தினத்திலே; ஆரியன் அற்றம் நோக்கி - இராமபிரான் சோர்வுற்ற சமயத்தைப் பார்த்து; வஞ்சனை மான் ஒன்று ஏவி - சூழ்ச்சி வடிவான ஒரு மானை ஏவிவிட்டு; மாயையால் - பொய்த் தோற்றத்தால் (தவவேடத்தால்); மறைந்து வந்தாய் - உன்னை மறைத்துக் கொண்டு வந்தாய்; உஞ்சனை போதியாயின் - தப்பிப் பிழைக்க விரும்பினால்; விடுதி - என்னை விட்டுவிடு; எதிர்ந்த போது - போர் செய்யும் காலத்தில்; உன் குலத்துக்கு எல்லாம் - உன் குலம் முழுமைக்கும்; நஞ்சினை - நஞ்சு போன்ற இராமபிரானை; நினதுநாட்டம் - உன்னுடைய கண்கள்; நோக்குமோ - பார்க்குமா?

மாயை - பொய்த்தோற்றம். அரவு அலங்கலாகத் தோன்றுவது. அற்றம் - சோர்வு. ஈண்டு அற்றம் என்றது பொய்மானை மெய் என்று கருதியது. எதிர்ந்த போது - போரிடும் போது. சூரியன் பெரும் பகைஞனும் சூரியன்மகனும் நேர் எதிர்ந்தனர். (படைத் தலைவர் 50) நஞ்சு போல்பவன் நஞ்சு என்று பேசப் பெற்றான். நஞ்சுதான் கண்டீர் நம்முடை வினைக்கு நாராயணா என்னும் நாமம் - என்பர் பரகாலர். அங்கு நாமம் நஞ்சு. இங்கு நாமி நஞ்சு. மாயை இறைவன்முன் இல்லாது போம் என்பது குறிப்பெச்சம். 'யாவையும் சூனியம் சத்து எதிர்' என்று சிவஞான போதம் கூறுகிறது. பெருமாள் கண் வட்டத்திலே நிற்கும் நீ தப்புவையோ? புலி முன்னே நிற்கும் நாய் போலே, பதினாலாயிரம் பேரைத் தனியே நின்று சூறையாடின தனி வீரத்துக்குப் பிரதிக் கிரியையாக மாரீசனைக் கொண்டு நீ பண்ணின கிருத்திமத்திலே (வஞ்சகத்தில்) கண்டிலோமோ? அவ் வாண் பிள்ளைகள் நாற்றம் கேட்டு நின்றால் பின்பன்றோ உன்னுடைய வெற்றியும் ஆண் பிள்ளைத் தனமும் காணலாம். பெரியவாச்சான் பிள்ளை விரிவுரை (சுந்தர - 2/- 3)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Because you were afraid, that day you watched for the noble one's unguarded moment,
  2. sent a deceitful deer, and came hidden in a false disguise.
  3. If you want to escape alive, let me go! When he faces you,
  4. will your eyes even be able to look at him, the poison to your whole race?'

What the poem says

Cītai reminds Irāvaṇaṉ how he took her: out of fear of Irāmaṉ he waited for a moment when he was off guard, sent the false golden deer, and came to her disguised as an ascetic.

If he wants to survive he should release her. When Irāmaṉ, who will be poison to his whole clan, meets him in battle, he will not even dare look him in the face. A Vaiṣṇava commentator is quoted mocking Irāvaṇaṉ as a dog that slinks away from a tiger.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1añciṉai ātalāṉ aṉṟu āriyaṉ aṟṟam nōkka,
vañcaṉai māṉ oṉṟu ēvi, māyaiyāl maṟaintu vantāy;
uñcaṉai pōti āyiṉ, viṭuti! uṉ kulattukku ellām
nañciṉai etirnta pōtu nōkkumō niṉatu nāṭṭam?