கம்பராமாயணம் 5235 · சுந்தர 4.119

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பத்து உள தலையும் தோளும் பல உள பகழி தூவும்
வித்தக வில்லினாற்குத் திருவிளையாடற்கு ஏற்ற
சித்திர இலக்கம் ஆகும்; அல்லது செருவில் ஏற்கும்
சத்தியை போலும்? மேல் நாள் சடாயுவால் தரையின் வீழ்ந்தாய்.

பொருள் · Meaning in Tamil

மேல் நாள் - அக்காலத்தில்; சடாயுவால் தரையில் வீழ்ந்தாய்! - சடாயுவாலே பூமியிலே விழுந்தாய் அல்லவா; பத்துள தலையும் - பத்தாக இருக்கும் உன் தலைகளும்; தோளும் - இருபது தோள்களும்; பலபல பகழி தூவி - பலவிதமான அம்புகளை ஏவி; வித்தக வில்லினாற்கு - அதிசய வில் வீரனாகிய இராமபிரானுக்கு; ஏற்ற திருவிளையாடற்கு - விளையாட்டு நிகழ்த்துதற்குப் பொருத்தமான; சித்திர இலக்கம் ஆகும் அல்லது - ஓவிய வடிவமாக அமைக்கப் பெற்ற இலக்குப் பொருளாகுமே அல்லாமல் (வேறு யாதாம்); செருவில் ஏற்கும் - போரிலே இராமனை எதிர்த்து நிற்கும்; சத்தியை போலும் - வலிமை உடையாயே.

உன் தலைகளும் தோளும் சித்திர இலக்கமாகும். எதிர்த்துப் போர் புரிய போர்ப் பயிற்சி செய்பவர்கள் எதிரே ஒரு துணையோ சித்திரத்தையோ நிறுத்தி அதன் மேல் அம்பு எய்வர். சங்க காலத்தில் இஃது முருக்க மரத்தால் செய்த தூணாய் இருந்தது. 'இளம்பல்கோசர் விளங்குபடை கன் மார்... இகலினர் எறிந்த அகலிலை முருக்கின் பெரு மரக்கம்பம்' என்று புறம் (169) கூறும். சிந்தாமணி 995 ஆம் பாடல் இது பற்றிக் கூறுகிறது. ஓவியம் போல் ஓர் இலக்காகி நிற்பை என்பது பழைய உரை (அடை - பதி)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Your ten heads and your shoulders will be no more than a painted target
  2. for the masterly bowman to shower with arrow upon arrow
  3. in his sacred sport; or do you think you have the strength
  4. to stand against him in battle? Long ago you fell to the ground before Caṭāyu!'

What the poem says

Cītai scorns Irāvaṇaṉ's strength. His ten heads and twenty shoulders will be nothing but a painted practice target for Irāmaṉ, the master archer, to riddle with arrows for sport.

Does he really imagine he could stand up to Irāmaṉ in battle, when he was knocked to the ground by the old vulture Caṭāyu? Warriors in training used to shoot at a painted post or pillar, as the commentary illustrates from Sangam poetry.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pattu uḷa talaiyum tōḷum pala pala pakaḻi tūvi
vittaka villiṉāṟkut tiruviḷaiyāṭaṟku ēṟṟa
cittira ilakkam ākum; allatu ceruvil ēṟkum
cattiyai pōlum? mēl nāḷ caṭāyuvāl taraiyil vīḻntāy.