கம்பராமாயணம் 5236 · சுந்தர 4.120
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அன்று - அக்காலத்தில்; பறவைக்கு - சடாயுவுக்கு; தோற்றனை - தோற்றுப் போனாய்; துள்ளு நீர் - செருக்குப் பண்பைப் பெற்ற; வெள்ளம் - (கங்கையின்) வெள்ளத்தை; சென்னி ஏற்றவன் - சடையில் தாங்கிய சிவபெருமானின்; வாளால் - வாள் கொண்டு; வென்றாய் - வெற்றி பெற்றாய்; அன்று எனின் - (வாள்) இல்லை என்றால்; அன்றே - அன்றைய தினமே; இறத்தி - இறந்து போயிருப்பாய்; நோற்ற நோன்பு - மேற்கொண்ட தவம், உடைய வாழ் நாள் - பெற்ற ஆயுள்; வரம் - வரம் (ஆகிய); இவை - இவையும்; நுனித்த எல்லாம் - ஆராய்ந்து பெற்ற பிற யாவும்; கூற்றினுக்கு அன்றே - கூற்றுவன் வராமல் தடுக்கவே அல்லாமல்; வீரன் சரத்திற்கும் - இராமபிரானின் அம்புக்கும்; குறித்தது உண்டோ - (தடையாக) வரையறுக்கப்பட்டதா?
துள்ளுதல் - செருக்குக் கொள்ளுதல். துள்ளும் இருவர்க்கும் (தேவாரம் 91-9) கங்கையை 'வெள்ளம்' என்று திருமுறை பேசும். வெள்ளநீர்ச் சடையர்போலும் (தேவாரம் 68- 1) நுனித்தல் - ஆராய்தல். குறித்தல் - வரையறுத்தல். கணித்தலும் குறித்தலும் - வரையறுத்தற் பொருட்டாமே (பிங்கலம் /777)
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'That day you were beaten by a bird; you won only with the sword
- of him who took the leaping flood upon his head; had it not been so, you would have died that very day!
- The penances you performed, the lifespan you possess, your boons and all else you have sought out —
- are they not only against Death? Was any of it meant to hold against the hero's arrow?'
What the poem says
Cītai presses the point: Irāvaṇaṉ was defeated by Caṭāyu, a mere bird, and survived only because he used the sword given him by Civaṉ, who bears the Gaṅgā's flood on his head.
All his austerities, his long life and his boons protect him only against ordinary death. None of them were ever meant to stop the arrows of Irāmaṉ, the hero.