கம்பராமாயணம் 5237 · சுந்தர 4.121

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பெற்று உடை வாளும், நாளும், பிறந்து உடை உரனும், பின்னும்
மற்று உடை எவையும் தந்த மலரவன் முதலோர் வார்த்தை,
வில் தொடை இராமன் கோத்து விடுதலும், விலக்குண்டு, எல்லாம்
இற்று உடைந்து இறுதல் மெய்யே! விளக்கின் முன் இருள் உண்டாமோ?

பொருள் · Meaning in Tamil

பெற்றுடை வாளும்நாளும் - நீ பெற்றுள்ள வாளும் ஆயுளும்; பிறந்துடை உரனும் - பிறப்பினால் அமைந்த வலிமையும், பின்னும் - மேலும்; மற்று உடை எவையும் - வேறு பெற்றுள்ள யாவும், தந்த - உனக்கு வழங்கிய; மலர் அயன் முதலோர் - மலரில் அமர்ந்த பிரமன் முதலானவர்களின்; வார்த்தை - உறுதிமொழிகள்; இராமன் - இராமபிரான்; வில் - வில்லில், தொடை கோத்து விடுதலும் - அம்பைத் தொடுத்து விட்டவுடனே; விலக்குண்டு - ஒதுக்கப் பெற்று; எல்லாம் இற்று உடைந்து - எல்லாம் வலிமை குறைந்து தோற்று; இறுதல் மெய்யே - அழிவது உண்மையாகும்; இருள் - இருளானது; விளக்கின் முன் உண்டாமோ - விளக்கிற்கு எதிரே நிலைத்து நிற்குமா?

பிறந்துடை உரன் - பிறப்பினால் பெற்ற வலிமை. 'பிறந்து நீயுடை தொல்பதம்' (கம்ப. 2475) 'வரம் பெற்றனவும், மற்றுள விஞ்சைகளும் ... உண்மையினோன் சரம் பற்றிய சாபம் விடுந்தனையே'... என்று சடாயு பேசினான். (கம்ப. 34/7) இராமபிரான் திரிசிரா போர்க்கு வந்த போது, 'துன் இருள் இடையது ஓர் விளக்கின் தோன்றினான்' என்று பேசப் பெற்றது (கம்ப. 2988) மற்றுடை எவையும் என்பதில் உள்ள மற்று - அசை. தொடை - அம்பு - தோணி சாயகமே பல்லம் தொடை சிலீமுகமே அம்பாம் (சூடா - நிக - செயற்கை 5)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The sword you were given, your lifespan, the strength you were born with, and
  2. everything else you have — the word of lotus-born Ayaṉ and the others who granted them —
  3. the moment Irāmaṉ fits an arrow to his bow and lets it fly, all of it will be swept aside,
  4. broken and shattered and finished; that is certain! Can darkness stand before a lamp?'

What the poem says

Cītai continues: all the gifts the gods gave Irāvaṇaṉ, his sword, his long life, his inborn strength and every boon promised by Piramaṉ and the rest, will be swept away the instant Irāmaṉ looses an arrow.

They will collapse as surely as darkness vanishes before a lamp. Elsewhere in the epic Irāmaṉ himself is described as a lamp appearing in thick darkness.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1peṟṟuṭai vāḷum, nāḷum, piṟantuṭai uraṉum, piṉṉum
maṟṟuṭai evaiyum tanta malar ayaṉ mutalōr vārttai,
vil toṭai irāmaṉ kōttu viṭutalum, vilakkuṇṭu, ellām
iṟṟu iṭaintu iṟutal meyyē! viḷakkiṉ muṉ iruḷ uṇṭāmō?