கம்பராமாயணம் 5249 · சுந்தர 4.133
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தென்தமிழ் உரைத்தோன் - இனிய தமிழுக்கு இலக்கணம் கூறிய அகத்தியன்; முன்னா - முதலான; தீதுதீர் - தீமையிலிருந்து விலகிய, முனிவர் யாரும் - எல்லா முனிவர்களும்; கோவே - தலைவனே; (யாங்கள்) புகுந்த போதே - அரக்கர்கள் தண்டகாரணியத்துக்கு வந்த காலத்திலிருந்தே; புன்தொழில் - அற்பத் தொழில் செய்யும்; அரக்கர்க்கு - இராக்கதர்களுக்கு; ஆற்றேம் - ஈடுகொடுக்க முடியாமல்; நோற்கிலெம் - தவம் செய்ய இயலாமல் உள்ளோம்; நின்னால் - உன்னால், அன்னார் - அவ்வரக்கர்கள்; குறைவது - அழிந்துபடுவது; சரதம் கொன்று அருள் என்றனர் - உண்மை அவர்களைக் கொன்று எமக்கு அருளுக என்று கூறினார்கள்; யானேகேட்டேன் - அவர்கள் மொழியை யானே கேட்டேன்; நீ - அதை அறியாத நீயும்; அதற்கு இயைவ செய்தாய் - அம்மொழிக்குத் தக்க தமையைச் செய்தாய்.
புகுந்த போதே - என்ற தொடரை 'யாங்கள் தண்டகாரணியம் புகுந்த போதே' என்று பொருள் கூறினர். முனிவர் பேச்சின் இடையே உள்ள தொடரை மாற்றலாமா. ஏற்பின் கொள்க. புகுந்த போதே - அரக்கர்கள் வரும்போதே என்றும் பொருள் கொள்ளலாம். புகும் போதே என்பது புகுந்த போதே என்றது காலமயக்கம் - (சிந்தா 423) தமிழ் என்றது இலக்கணத்தை. 'தமிழ் தந்தான்' (கம்ப. 2611) என்று முன்பு பேசப் பெற்றது. அகத்தியன் படைத்தது மொழியன்று. இலக்கணமே.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'All the faultless sages, led by him who gave the southern Tamil its grammar, said,
- "We cannot withstand the demons of vile deeds; we cannot do our penance!
- Kill them the moment they come, and show us grace! It is certain they will be destroyed by you, O king!" —
- I heard it myself; and you have done just what fits that.'
What the poem says
Cītai recalls how, in the Daṇḍaka forest, the sages led by Akattiyaṉ, who gave Tamil its grammar, came to Irāmaṉ and begged him to protect them from the demons who made their penance impossible.
They told him the demons were sure to be destroyed by his hand, and she heard it herself. By abducting her, Irāvaṇaṉ has done exactly what will bring that prophecy to pass.