கம்பராமாயணம் 5248 · சுந்தர 4.132
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மறம் திறம்பாத - வீரத்திலிருந்து விலகிச் செல்லாத; தோலா - தோல்வியடையாத; வலியினர் எனினும் - வல்லமையுடையவர் என்றாலும்; மாண்டார் - அழிந்து போனவர்கள்; அறம் திறம்பினரும் - தருமத்திலிருந்து விலகினவரும், மக்கள் - மக்களிடம் காட்ட வேண்டிய; அருள் திறம்பினரும் - கருணையிலிருந்து விலகினவரும்; அன்றே - அல்லவா? துறந்து - ஆசைகளை விலக்கி; அரும்பகைகள் மூன்றும் - கொடிய முப்பகைகளையும்; துடைத்தவர் - அழித்தவர்களே; பிறந்து இறந்து - உலகிலே பிறந்தும் இறந்தும்; உழலும் - சுழன்று கொண்டிருக்கும்; பாசப்பிணக்கு உடை - பாசக்கட்டுடன் கூடிய; பிணியின் தீர்ந்தார் - நோயிலிருந்து விலகினார்கள்; பிறர் யார் - மற்றவர் யார்? சொல்லாய் - சொல்வாயாக.
வலிமை வாழும் என்பது இராவணன் கருத்து. அறம் வாழும் என்பது பிராட்டியின் கொள்கை. பாசப்பிணக்கு - பாசக்கட்டு. பாசம், கயிறு, பற்று பாசமாம் பற்று (திருவாசகம்) பாசப் பிணிப்பால் ஆன்மா பசு ஆகிறது. முப்பகை - காமவெகுளி மயக்கம். அருளும் அன்பும் நீக்கி, நீங்கா நிரயம் கொள்பவரோடு ஒன்றாது வாழ்க, என்பது பிராட்டியின் செவியறிவுறூஉ.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Even those of unconquered strength who never swerved from valour have perished —
- were they not the ones who swerved from dharma and from mercy to living beings?
- Those freed from the tangled bondage of being born and dying and wandering on
- are the ones who renounced and wiped out the three hard foes. Who else? Tell me!'
What the poem says
Cītai sets out the moral law. Even warriors of unbeaten strength and unflinching courage have been destroyed, and they were precisely those who turned away from righteousness and from compassion.
Only those who renounce desire and destroy the three inner enemies, lust, anger and delusion, are freed from the endless round of birth and death. Irāvaṇaṉ trusts in strength; Cītai trusts in dharma.