கம்பராமாயணம் 5247 · சுந்தர 4.131
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஏழாய்! - அறிவற்றவனே! நின்கண் - நின்னிடத்தில்; இப் பெரும் செல்வம் - இந்தப் பெரிய செல்வத்தை; ஈந்த - வழங்கி; பேரீசன் - மகாதேவனான சிவபெருமான்; யாண்டும் மாதவத்தின் நின்று - எப்பொழுதும் பெரிய தவத்தில் நிலைத்திருந்து; அப்பெரும் செல்வம் - அந்தப் பெரிய செல்வத்தை; துய்ப்பான் அன்றே - அனுபவித்துக் கொண்டுள்ளான் அல்லவா (அங்ஙனம் இருக்க); ஒப்பரும் திருவும் - ஒப்பற்ற செல்வமும்; நீங்கி - உன்னை விட்டு விலகி; உறவொடும் - சுற்றத்தோடும்; உலக்க உன்னி - அழிய நினைந்து; அறத்தைத் தப்புதி - அறத்திலிருந்து தவறுகிறாய்; தருமத்தைக் காமியாயோ - அறத்தை விரும்பமாட்டாயா?
சிவபெருமான் தவத்திலிருப்பது வெளிப்படை. அவன் துய்க்கும் செல்வம் நிலைபேறானது சிவமாயிருத்தல். தப்புதல் - தவறுதல். இறைவன் உனக்குச் செல்வத்தை வழங்கியது நீ தவத்திலிருந்து உயர்வடையவல்லவா, என்று உரை கூறினர் பலர். ஈசன் செல்வம் ஈந்தது (நீ) யாண்டும் மாதவத்தின் நின்று அப் பெரும் செல்வம் துய்ப்பான் அன்றே - எனக் கூட்டிப் பொருள் கொள்வர்
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'The great Lord who gave you this vast wealth — does he not
- enjoy that greater wealth of his by abiding forever in great penance?
- Yet you, set on losing your matchless fortune and perishing with your kin,
- stray from dharma, you fool! Do you not desire dharma at all?'
What the poem says
Cītai points out that Civaṉ, who granted Irāvaṇaṉ his huge wealth, himself enjoys his own supreme state by remaining always in deep austerity.
Irāvaṇaṉ, by contrast, abandons righteousness as if he wanted to lose his unrivalled fortune and see his whole family destroyed. Others read the verse as saying that Civaṉ gave him wealth so that he might rise through penance.